அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு: மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படும்…முதல்வர் பழனிசாமி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் நேற்று உரையாற்றிய நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கொரோனா தடுப்பு, மீட்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் முதலில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருவதாக பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவை பின்வருமாறு….

* கொரோனா வைரஸ் மிக எளிதாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது.
* தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
* அரசின் உத்தரவுகளை சரியாக பின் தொடர்ந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.
* பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்கலாம்.

* பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படும்.
* தொழில்துறையை மீட்டெடுக்க அரசு கமிட்டி அமைத்துள்ளது.
* அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
* பொதுமக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அந்தந்த வழிகளில் அரசு உதவுகிறது.
* மக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அதிகாரிகளே காரணம்.

* உதவி தேவைப்படும் அனைவருக்கும் அரசு உதவிக்கரம் நீட்டுகிறது.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்களை வழங்கினோம்.
* ஜூன் மாதத்திற்கும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினோம்.

* தமிழகத்தில் உணவு பஞ்சம் என்கிற பிரச்னையே எழவில்லை.
* அம்மா உணவகத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.
* அம்மா உணவகம் மூலம் 7 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு உணவு அளிக்கப்படுகிறது.

* மாநிலத்தில் இறப்பு விகிதம் 0.67% மாக உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைவு.
* தொற்றின் அளவு அதிகரித்து பின்னர் தான் குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
* குடிமராமத்து திட்டம் கடந்த காலம்போல நடப்பு ஆண்டிலும் செயல்படுத்தப்படும்
* இந்தாண்டும் குடிமராமத்து திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும் ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன