அனல் பறக்கும் அமெரிக்கா தேர்தல் முடிவுகள் ஜோ பைடன் 238, டிரம்ப் 213!

உலகளவில் கவனம் பெற்றுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது

அமெரிக்க அதிபர்ட்ரம்பின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வாக்குப் பதிவுகள் முடிந்திருக்கின்றன. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே வாக்கு எண்ணிக்கைத் தொடங்கப்பட, அமெரிக்காவின் நேர வேறுபாட்டால் சில மாநிலங்களில் வாக்குப் பதிவு அதன் பின்னர் தொடங்கியது.

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இதில் தற்பொழுது வரை ஜோபிடன் 238 இடங்களிலும் டொனால்ட் டிரம்ப் 213 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்கா தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெற்றால் தான் வெற்றி பெற முடியும் .

கொரோனாவை கையாண்ட முறையில் டொனால்ட் டிரம்ப்பின் மீது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .இதுவரை 2.5 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .

இதன் வெளிப்பாடே டிரம்ப்க்கு சற்று பின்னடைவை தந்துள்ளது .தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலிருந்தே ஜோபிடன் முன்னிலையில் இருந்து வருகிறார் .

அமெரிக்க தேர்தல் 2020: களத்தில் நிற்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் – வெற்றி யாருக்கு?

அமெரிக்க அதிபர் முடி சூடப் போவது யார்?

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன