அனுபவங்களை தேடி…

அத்துணை பேரும் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்… நாம் எல்லோரையுமே திருப்திப் படுத்தி வாழ்வது கொஞ்சம் சிரமம் தான்…

ஆனால்

வாழ்க்கையில் நமது அனுபவத்தின் மூலமாக எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றோம்.

எத்துணை படிப்புகள் படித்திருந்தாலும் அனுபவ படிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அனுபவமே இல்லாமல் வெறும் கல்வி மூலமாக நாம் எதனையும் சாதித்தல் கொஞ்சம் சிரமம் தான்..

அதே சமயத்தில் முறையான கல்வி இன்றி வெறும் அனுபவத்தின் மூலமாக ஒரு காரியத்தைத் துவங்குதல் அதனை விட பெரும் ஆபத்து. சில வழி முறைகளைை வகுக்க கண்டிப்பாக முறையான கல்வி உதவும் என்பதும் உண்மைதான்..

புதிய அனுபவங்களை பெறுவதின் மூலம் நமது சுயமதிப்பை நமது நம்பிக்கையை ஒரு நேர்மறையான மாற்றத்தை அதிகப் படுத்த முடியும்…

அதே சமயத்தில் முறையான கல்வி இன்றி வெறும் அனுபவத்தின் மூலமாக ஒரு காரியத்தைத் துவங்குதல் அதனை விட பெரும் ஆபத்து.

சில விஷயங்களில் அது போதுமானதாக இருந்தாலும் பெரும்பாலான காரியங்களுக்கு வெற்றியை நன்மையைத் தருவது இல்லை.

முறையான கல்வி அறிவை பெற்றிருந்தாலும் நமது அனுபவப் பாடத்தை மேலும் பெருக்கிக் கொள்ள புதிய புதிய சூழலுக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ளல் அவசியம்.

புதிய அனுபவங்கள் புதிய நம்பிக்கைக்கு வழி வகுக்கும்…  எனவே புதுப் புது அனுபவங்களைத் தேடி உற்சாகமான வாழ்க்கையை வாழ்வோம்…

டெய்ல்

= = = =:

ஆகவே நண்பர்களே .. நாம் பெற்ற முறையான கல்வி மூலம் அற்புதமான அனுபவங்களை கடந்து புதியதோர் உலகம் செய்வோம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன