அன்பு -ஹெல்மெட் போட வைக்கும் – சட்டமீறலை சரி செய்யும்.

வெளிச்சத்துக்கு வாங்க ..
____________________________

அன்பு உள்ளங்களுக்கு அன்பால் வணக்கங்கள்

🌸🌸🌸🌸🌸🌸
*சமூகத் தொண்டில்
(RAJAKARJANAI) நமது ராஜகர்ஜனை தன்னை
இணைத்துக் கொண்டு தன்னலம் கருதாமல், பாரபட்சம் இல்லாமல் பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் அத்துணை பேரையும் அன்புடன் அணுகி

அன்பு தான் ஆனந்தம்

அன்பு தான்அற்புதம்

அன்பு தான்அமிர்தம்

– என்ற கோட்பாட்டுடன்
இந்த சமூகத்திற்கு
“அன்பு ” அகிலத்தில் அனைத்திலும் சிறந்தது என உணர்த்த
பாடுபட்டுக் கொண்டிருக்கிறது

.

எவ்வளவு பெரிய சமூக அவலத்தையும் ,சட்ட மீறுதலையும் அன்பினால் மாற்ற முடியும்.

உதாரணத்திற்கு போன வாரம் (0.M.R – ல்) நாம் கண்ட காட்சி…

மற்றும் இந்த கட்டுரையை நாம் எழுதத் தூண்டிய நிகழ்வு..

ஹெல்மெட் போடாதவரை எல்லாம் மிரட்டி கும்பலாக தன் உயரதிகாரியிடம் கொண்டு செல்கிறார் ஒரு கான்ஸ்டபிள் .

அந்த அதிகாரியோ
அவர்களை அணுகிய விதம் ஆச்சர்யபடவைத்தது.

மிக்க அன்புடன், மனித நேயத்துடன் அவர்களிடம் பேசி தலைக்கவசம் போடுவதின் முக்கியத்துவத்தை மிக அழகாக எடுத்துரைத்தார்..

டேங்கில் மற்றும் பின்புறம் ஹெல்மெட்டை வைத்திருந்த நபர்களுக்கு அவரே எடுத்து அணிவித்து அடுத்த முறை அவசியம் உங்களை ஹெல்மெட் டுடன் தான் பார்க்க வேண்டும் –

( விளம்பர பாணியில்)

என்றாரே பார்க்கலாம்.

அங்கு சட்டத்தை மீறிய அனைவருக்கும் மட்டுமல்ல..

ஓரமாக நின்ற நமக்கும் அவர் காட்டிய அன்பினால் ஆகிய கண்டிப்பினால் மனம் நெகிழ்ந்தது.

அபராதம் கட்டியிருந்தால் கூட அந்த தவறை மறுபடியும் செய்வார்கள்.

ஆனால் அவரது அன்பின் வெளிப்பாடு அடுத்த முறை கண்டிப்பாக அந்த சட்ட மீறலை செய்யத் தோன்றவே தோன்றாது.

அன்பு காட்டுங்கள்
அன்பால் இணைந்திடுங்கள்

*அகிலம் உங்கள் கையில்.*. –

*நேர்மைக்கு புறம்பாக வாழ்ந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளப் போகிறோமா? அல்லது தூய்மையாக அன்பினால் சூழப்பட்டு வாழப்போகிறோமா?

தீர்மானியுங்கள்..

புரிய வேண்டியவர்களுக்கு புரியுமா?*
________________________________

இதன் பொருட்டு நமது ராஜ கர்ஜனை இதழில் மூன்று வருடங்கள் ஆகிய நிலையில் நாம் இப்பொழுது ஒவ்வொருவரையும் அன்பினால் ஆராதிக்க எண்ணி ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட எண்ணி பாலமாக சேவை மனப்பான்மையுடன்

கர்ஜனையின் நியூஸ் (Karjanayin NEWS) என்ற ஒரு சிறப்பு இதழை தயாரித்திருக்கிறோம்.
படியுங்கள் – பகிர்ந்து கொள்ளுங்கள்..

அன்புடன் –

ராஜகர்ஜனை

– ஆசிரியர் Uக்கம் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன