அப்பாவி தமிழ் பட நடிகை மக்களவை எம்.பி

கருணாஸ் பட கதாநாயகி!

மகாராஷ்டிரா மக்களவை உறுப்பினர்..

லொடுக்கு பாண்டியாக அசத்தி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ வாகிய கருணாஸ் அவர்களுக்கு ஜோடியாக, அப்பிராணி மனைவியாக ‘ “அம்பாசமுத்திரம் அம்பானி ” படத்தில் நடித்தவர்தான் நடிகை நவ்னீத்.

அது மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய்காந்த் நடித்த அரசாங்கம் ” பட நாயகியும் இவர் தான்.

கடந்த மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியின .

. ஆனால் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி 41 இடங்களை வென்றது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியால் 6 இடங்களை மட்டுமே வெல்லமுடிந்தது.

பஞ்சாபியான நடிகை நவ்னீத் கெளர் ராணா, நடந்துமுடிந்த மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிட்டுள்ள 34 வயது நவனீத் கெளர், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் தன் கணவரும் சுயேட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கிய யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக சுயேச்சையாகப் போட்டியிட்டார். சிவசேனா கட்சியைச் சேர்ந்த இருமுறை எம்.பியாக இருந்த ஆனந்த் ராவ் அட்சுலை 36,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி. ஆகியுள்ளார்.

அவர் போட்டியிட்ட “யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சியை ” காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் ஆதரித்தன.

2014-ல் இதே வேட்பாளரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு, 1.37 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற நவனீத் கெளர், இந்தமுறை வெற்றிவாகை சூடியுள்ளார்.

நடிகை மற்றும் மக்களவை எம்.பி யான நவ்னீத் கெளர், மும்பையில் படித்து வளர்ந்தவர்.” –

முதலில் நடிப்பால் ஈர்க்கப்பட்டு ஒரு வலம் வந்தார்.

தற்போது மக்கள் பணியில் ஈர்க்கப்பட்டு அரசியல் களம் புகுந்துள்ளார்.

அவர் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்

 

ராஜ கர்ஜனை (அரசியல்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன