ஆறடி முதலையை அனாயசமாக விழுங்கிய மலைப்பாம்பு

*முதலையை உயிரோடு விழுங்கிய ஆலிவ் மலைப்பாம்பு..!*

*ஆஸ்திரேலியாவில், ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று, பெரிய அளவிலான முதலையை கடித்து விழுங்கும் புகைப்படங்கள் தற்சமயம் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.*

_ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள இஸா மலையில், மார்டின் முல்லர் என்பவர், வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தபோது இந்த அரிய வகை காட்சியை பதிவு செய்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகளவு காணப்படும்

ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று நீர்நிலையோரம் படுத்திருந்த முதலை ஒன்றை சத்தமின்றி நகர்ந்து வந்து சுற்றி வளைத்து, பின் முதலையின் உடலை இறுக்கி அதன் எலும்புகளை நொறுக்கி , சேறும்,சகதியாக அதனை அப்படியே வாய்க்குள் விழுங்கிய காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த காட்சிகளை தைரியமாக படம் பிடித்த மார்டின் முல்லர்,

 

இவ்வகை மலைப்பாம்புகள் 13 அடி நீளம் வரை வளரக்கூடியது என்றும், மனிதர்கள், மான்கள் என எதையும் விழுங்கும் அளவிற்கு அதன் தாடைகள் ரப்பர் போல் நெகிழும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்._

இந்த காட்சிகள் மிகவும் நெகிழும்படியாகவும் அதே சமயம் பயமாக உள்ளதாகவும் பல பேர் தெரிவித்துள்ளனர்.

படைப்பில் பல வினோதங்கள்

ராஜ கர்ஜனை ( உலகம் – பொழுதுபோக்கு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன