இந்தியாவின் 34% குடும்பங்கள் பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிரே வாழ முடியாது மக்களை ஏமாற்றும் மோடியின் 20 லட்சம் கோடி பேக்கேஜ்!

பாஜக பிரதமர் மோடி  கொரானாவுக்கு பின் உள்ள நிலைமை சமாளிக்க என்று 20 லட்சம் கோடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.  இதற்கிடையே ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகளெல்லாம் இன்னும் யாருக்கும் பயன்படவில்லை என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபிக்கிறது.
கொரோனா லாக்டவுனால் இந்தியாவின் 34% குடும்பங்கள் பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிரே வாழ முடியாத அளவுக்கு வறுமை கோரத்தாண்டவமாடுவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, லாக்டவுன் நீட்டிக்கப்படும்; ஆனால் புதிய முறையில் லாக்டவுன் அமலில் இருக்கும் என கூறியிருந்தார். இந்த நிலையில் லாக்டவுன் கால இந்திய குடும்பங்களின் நிலை குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவை:
*இந்தியாவின் 84% குடும்பங்களின் மாத வருமானம் என்பது குறைந்து போயுள்ளது.
*நாட்டில் பணிபுரியக் கூடிய வயதினரில் 4-ல் 1 பங்கினர் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மார்ச் 21-ந் தேதியன்று வேலைவாய்ப்பின்மை என்பது 7.4% ஆக இருந்தது. இது மே 5-ந் தேதியன்று 25.5% ஆக கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் 2.7 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
*இந்தியா முழுவதும் 34% குடும்பங்கள் (மூன்றில் ஒரு பங்கு) பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிர் பிழைக்கவே முடியாது என்கிற நிலையில்தான் உள்ளன. ஆகையால் இத்தகைய குடும்பங்களுக்கான உதவிகள் உடனடியாக சென்றடைய வேண்டும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கெளசிக் கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

One thought on “இந்தியாவின் 34% குடும்பங்கள் பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிரே வாழ முடியாது மக்களை ஏமாற்றும் மோடியின் 20 லட்சம் கோடி பேக்கேஜ்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன