இன்றைய சிறப்பு செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் 113 வயதை கடந்த பாட்டி தனது மன வலிமையால் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மீண்டு முற்றிலும் குணமடைந்துள்ளார்.

இரண்டாம் கட்ட மீட்பு பணியின்போது 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேலும் 13 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்களில் ஏழைகளுக்கும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏதும் இல்லை என்று ப.சிதம்பரம் சாடினார்.

வேலையிழப்பும், வருமான இழப்பும் தாண்டவமாடுகிறது என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன