கணவனுடன் சேராமல் தடுத்த மாமியாரை எரித்த மருமகள்..

கணவனிடம் சேரவிடாமல் தடுத்த மாமியாரை…

காபியில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து தூங்கி கொண்டிருந்த மாமியாரை தீ வைத்து எரித்தே கொன்றுவிட்ட மருமகள்!!!!!!!

வரதட்சணை கொடுமை, சித்ரவதைகளால் ஸ்டவ் வெடித்தது எல்லாம் அந்த காலம்.

இப்போது நிலைமையே தலைகீழாகி வருகிறது.

சென்ற வருடம் தஞ்சாவூரில் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் மாமியார் ஒருவர், மருமகளின் வயிற்றிலேயே மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொன்றார்..

ஆனால் தற்போது புதுக்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது.

வல்லக்கோட்டை அருகிலுள்ள மணியம்பலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்..

ஒரு மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்..

இவருக்கு 2 வருடத்துக்கு முன்பு பிரதீபா என்பவருடன் திருமணம் நடந்தது.

9 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ரமேஷின் அப்பா டீ கடை வைத்துள்ளார்..

அம்மா ராஜம்மாள் 100வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு 58 வயதாகிறது.

இந்நிலையில், நேற்று திடீரென வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது..

துர்நாற்றமும் சேர்ந்து வீசவும் அந்த பகுதி மக்கள் பதறி அடித்து கொண்டு ஓடிவந்தனர்.

வீட்டினுள் சென்று பார்த்தால் ராஜம்மாள் தீயில் கருகியவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்..

அவரை உடனடியாக மீட்டு புதுக்கோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் உயிர் பரிதாபமாக பிரிந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்..

அப்போது 23 வயது மருமகள் பிரதீபாவின் நடவடிக்கைகளில் முன்னுக்குபின் முரணாக இருக்கவே போலீசாருக்கு சந்தேகம் வரவே அவரை தனியாக அழைத்து விசாரித்தனர்.

அப்போதுதான முற்றும் எதிர்பாராத அதிர்ச்சி தகவலை பிரதீபா சொன்னார்..

நான் டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளேன்.. கல்யாணத்துக்கு என் வீட்டில் வரதட்சனை தந்தும், என் மாமியார் ராஜம்பாள் இன்னும் வேண்டும் என்று அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்.

எல்லாவற்றையும் பொறுத்து கொண்டுதான் போனேன்.. வரதட்சணை கொண்டு வந்து தரும்வரை கணவனுடன் நான் ஒன்று சேரக்கூடாது என்று அடிக்கடி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தார்..

சந்தோஷமாக நாங்கள் இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்..


இதெல்லாம் தாங்க முடியாமல்தான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்..

சம்பவத்தன்று 100 நாள் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார்.. காபி போட்டு தரும்படி கேட்டார்.. அப்போதுதான் நான் 5 தூக்க மாத்திரையை காபியில் கலந்து தந்தேன்.. அதைகுடித்து படுத்து தூங்கி விட்டார்.உடனே நான், என் மாமியார் உடம்பில் அரை லிட்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டேன்.. வீட்டின் வெளிக்கதவையும் பூட்டிவிட்டு வந்துவிட்டேன்.. அவர் அலறியும் காது கேட்காதுபோல இருந்துவிட்டேன்” என்றார்.

பிரதீபாவிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

சந்தோஷமாக வாழ முடியவில்லையே என்று மாமியாரை கொன்ற பிரதீபா இன்று ஜெயிலில் உள்ளார்.. அந்த 9 மாத பெண் குழந்தை நிலை என்னாகுமோ தெரியவில்லை!!*

டெய்ல் பீஸ் :

காலம் கலிகாலம்..நினைக்க முடியாதது எல்லாம் நடக்கிறது. அவரவர்கள் பார்த்து திருந்தினால் தான் உண்டு.

ராஜகர்ஜனை (சமூக அவலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன