கருத்துக் கவி காவியா .-2

அழகான பள்ளிக்கூடம்
அமைதியான வகுப்பறை ஆசிரியர் வந்தார்..
அறிவழகா.வா. என்றார்.

இன்று
பூலோக பாடம்
பூமி உருண்டையை
மேசை மேல் வை- என்றார்.

மாணக்கர்
ஒவ்வொருவரையும்
ஒன்றன் பின் ஒன்றாக
அழைத்து
அந்த பூமி பந்தில்
அச்சிட்டுள்ள
அண்டை நாடுகளை

“காண்பி” என்றார்.
கண நேரம் சென்றது.
கடைசி பெஞ்சில்
குறட்டை சத்தம்…

ஏலேய் …

“கடசி பெஞ்சி கணேசுவ”
எழுப்பு என்றார்

திரு திருவென
முழித்துக் கொண்டு
திசைதெரியாமல்
விழி பிதுங்கிய கணேசன்..

பிரம்பால் விளாசி விட்டு
பூமியை காட்டி
வினா எழுப்பினார் –
அண்டை நாட்டை பற்றி
அறிவீலியாய் முழித்தான் அவன்..

சரிடா…
நம் நாடு இதில்
எங்குள்ளது?- என
பூமிப் பந்தை உருட்டினார் ஆசிரியர் …

அமைதியாக
பதில் உரைத்தான் அவன்..

சார்.. மன்னிச்சுக்கோங்க..
என்னிக்கிமே நான் என்
சொந்த நாட்ட காட்டிக் கொடுக்க மாட்டேன் – ல…

            கருத்துக் கவி காவியா ..

பி.கு.. – சமாளிக்கவும் திறமை வேண்டும்

ராஜகர்ஜனை ( சிந்தனை – சிரிப்பு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன