கருத்துக் கவி காவியா – 3 (ஞானி)

தன் வேலையாளிடம் அவன்
தெரியாமல் செய்த தவறுக்காக
தெரிந்தே ” காச் மூச்” என
தெறித்துக் கொண்டிருந்தார்
திக்கட்டும் புகழும்

அந்தமேலை நாட்டு ஞானி

செய்வதறியாமல் , செயலிழந்து
விழித்துக் கொண்டிருந்தான் அவன்…

கொல்லைப்புறம் பூச்செடிகளிடம்
கொஞ்சிக் கொண்டிருந்த பாரியாள்
பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்து
பெரும்
பானையிலே தண்ணீர்
கொண்டு வந்து
பட பட வென
அவர் தலையில்
அபிஷேகம் பண்ண…

சற்றும் எதிர்பாராத அவரும்

சறுக்கும் நீரை துடைத்துக் கொண்டே சொன்னாராம்..

இதுவரை இங்கு இடி இடித்தது.
இப்பொழுதுதான் தடதடவென மழை பொழிகிறது…

சமாளித்தாராம்… ஹாஸ்யமாய் – விஞ்சிய கோபத்தை அடக்கிக் கொண்டு…

– கருத்துக்கவி காவியா .

பி.கு.- இப்படித்தான் பல பேர் கோபத்தை அடக்கி சிரிப்பாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.

 

ராஜகர்ஜனை ( சிரிப்பும் – சிந்தனையும் )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன