தீராத பெண்ணாசை.. அண்ணாச்சியின் அபிலாஷை…

பார்வையில் சொக்கினார்.

அழகில் மயங்கினார்..

காமம் கண்களை மறைக்க

பெண்களை மடக்கினார்.

பேரழிவுக்கு வழி தேடினார்.

கடைசியில் கொலையும் செய்தார்..  ஜெயில் வாசம் தேடி வந்தது சரவண பவன் ராஜகோபாலுக்கு ..

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட (உசச நீதிமன்றம் ஆயுர் தண்டனையை உறுதி செய்து ஜூலை 7ம் மேதி ஆஜராக சொன்னது) சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்   .

(ஜூலை -7)

சரணடையவில்லை

வெளிநாடுகளிலும் தன் கைகளை விரித்து பல கிளைகளை தன்னகத்தே உள்ளடக்கிய தன்னிகரில்லா ஒரு ஓட்டலாக இருந்தது “சரவணபவன் ”  ஆகும்.

இதன் உரிமையாளர் ராஜகோபால். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். அவருக்கு வயது 71.

சுமார் 11 வருடங்களுக்கு முன்பு புகழின் உச்சியில் இருந்த ராஜகோபால் அண்ணாச்சி ஏற்கனவே இரண்டு திருமணம் பண்ணிக்கொண்ட அவர் (அவரது இரண்டாவது திருமணமும் சர்ச்சைதான்)

மூன்றாவதாக

தனது உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். இவர் ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டால் மென்மேலும் மேன்மை அடையலாம்

(இருக்கும் மேன்மை போதாது ? )

என ஜோதிட மேதைகள் (?) கூறியிருந்தார்களாம்.

அப்படி கணிக்க முடிந்த சோதிட வல்லுனர்களுக்கு அவர் அந்த பெண் அதாவது ஜீவஜோதி விஷயத்தில் தலையிட்டால் இவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று சொல்லத் தெரியவில்லையோ.. -ஐயகோ’. –

அது அந்த அற்புத ஜோதிடர்களுக்கும், அண்ணாச்சிக்கும் மட்டுமே வெளிச்சம்.

இந்த நிலையில் இந்த விஷயம் முற்றுவதற்குள் ஜீவஜோதியோ முந்திக் கொண்டு பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் கடுமையாக ஆத்திரமடைந்தார் ராஜகோபால்.

ஆனால் ஜீவஜோதியை எப்படியாவது அடைய வேண்டும் என பெண் பித்து பிடித்து அலைந்த அண்ணாச்சி பல வழிகளில் ஜீவஜோதிக்கு தூது ,மற்றும் மிரட்டலும் விடுத்தார்.

கடைசியில் எதுவும் பலனிக்காத நிலையில் பின்னர் கடந்த 2001-ஆம் ஆண்டு கொடைக்கானலில்

ஜீவஜோதியின் காதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு ராஜகோபாலின் தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டார்.

ராஜகோபால் இதை முதலில் முற்றிலும் மறுத்த போதிலும் கடத்தியவர்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்ட படியால் அவர் சரியாக மடக்கப்பட்டு  குற்றம் நிரூபிக்கப்பட்டு  2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 55 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தன் பண பலத்தையெல்லாம் எல்லாம் ஒன்று திரட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். இதில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதி வென்றது.

இதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

அங்கும் அவர் பாச்சா பலிக்கவில்லை.

உச்ச நீதி மன்றம் மேலும் அவர் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடையவும் கெடு விதித்தது. இதனால் 7ம் தேதி அவர் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அவர் ஆஜராகவில்லை. அவரின் உடல்நிலையை காரணம் காட்டி தள்ளிப்போடுவதற்கு முயற்சி செய்து இருக்கிறார்.

அதாவது கோர்ட்டில் அவகாசம் கேட்டிருக்கிறார். அல்லது வேறு வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்.

வழக்கை தற்சமயம் நாளை (ஜுலை- 9) தள்ளிப் போட்டிருக்கிறது நீதிமன்றம் .

அநேகமாக நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்வார்கள் என்றும், உடனே சரணடைய உத்தரவிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஊருக்கே சோறு போட்டவர், உலகெங்கும் உணவால் பேசப்பட்டவர் …இன்று கண்ணை மறைத்த காமத்தால் களி தின்னப் போகிறார்.

எது எப்படியோ உப்பை தின்றவன் தண்ணிர் குடித்துத் தானே தீர வேண்டும்.

இறைவன் இருக்கிறான்???…

விழிப்புணர்வு .-

-பெண்ணாசையால் ஒரு சாம்ராஜ்ஜியமே அழியும்.

ராஜ கர்ஜனை ( சமூகம் )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன