பத்திரிகையாளருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம்

🏦🏦🏦🏦🏦

*உ.பி- யில் ஒரு பத்திரிகையாளர் கைதுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது*

*அத்துடன் உத்தரப் பிரதேச அரசை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளாசியுள்ளனர்.. “எந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை கைது செய்தீர்கள் ? கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா ? கொலைக்குற்றம் செய்துவிட்டாரா ? அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க அவசியம் என்ன ? லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு தனிநபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமையுள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா ? எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா ?” என்று கேள்விகளை என உத்தரப் பிரதேச அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடினர்.*
🌸🌸🌸🌸🌸
*மேலும் செய்தியாளர்களை கைது செய்த உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம். தெரிவித்தது*
🌸🌸🌸🌸🌸🌸
அதன் பின்னனி இதுதான்👇👇👇👇

*உ.பி.யில் முதல்வர் குறித்த கருத்து பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்*


🌸🌸🌸🌸🌸
அதன் எதிரொலி தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு
🌸🌸🌸🌸🌸
*கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.*
🌸🌸🌸🌸🌸

 

Karjanayin NEWS

 

ராஜகர்ஜனை ( சமூக நலம்)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன