பள்ளி மாணவி எரித்துக் கொலை

பத்தாம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம்

– அதிமுக பிரமுகர்கள் கைது!

விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி நேற்று அவரது வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்டார்.

95 சதவிகிய தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் ஜெயஸ்ரீ, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி இன்று மரணம் எய்தினார்.

மாணவி கொடுத்த மரண வாக்கு மூலம் மூலமாக மாணவியை எரித்துக்கொன்ற அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் முன்னால் கவுன்சிலர் ஆவார்.

மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியின் சித்தப்பா, ஏற்கனவே வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் அடிக்கடி நடந்துவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதற்கு பலிகடாவாக ஏதும் அறியா மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர்கள் திரு.மு.க.ஸ்டாலின், திரு.தினகரன் மற்றும் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கீழே எரிந்த நிலையில் அந்தப் பெண்ணின் மரணவாக்குமூல காணொலி – இளகிய மனம் மற்றும் சிறுவர் பெண்கள் தவிர்க்கவும்

 

ராஜகர்ஜனை (சமூக அவலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன