பெரியவர்கள் மெச்சும் மருமகள் ?- பெயர் வாங்குவது எப்படி?

பல வீடுகளில் மருமகள் ஆதிக்கம் சரியாக அமைந்து விட்டால் அந்த குடும்பம் அற்புத ஆலயம் ஆகிவிடும்.

மாமியார் மாமனாரிடம் குடும்பத் தலைவியின் பங்கு எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு அற்புதங்களால் சூழப்பட்டிக்கும் நம்முடைய வீடு…

மாமியார் மாமனாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

👩 திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கு அவளின் தாய் கணவரிடமும், மாமியார் மற்றும் மாமனாரை அனுசரித்து நடக்க வேண்டும் என்று அன்புடன் போதிக்க வேண்டும். புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் போதே அந்தப் பெண் மாமியார், மாமனாரை இன்னொரு தாயாகவும் தகப்பனாகவும் பார்க்க வேண்டும். மாமியார் மாமனார் என்றாலே எப்பவும், குறை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். பொறுமையாய் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டு, அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

குறை சொல்கிறார்களா?

👩 மாமியார், மாமனார் ஏதாவது அறிவுரை கூறினால், அவர்கள் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். தேவை ஏற்படும் போது மட்டுமே அவர்கள் அறிவுரை சொல்வார்கள் என்று நம்புங்கள்.

👩 எதற்கெடுத்தாலும் விவாதம் செய்யாமல், அவர்கள் ஏதாவது கருத்து சொன்னால், உடனடியாக மறுத்து பேசாமல், சிறிது நேரம் கழித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். நீங்கள் சொன்னா சரியாக தான் இருக்கும் என்று இறுதியாக சொல்லி விடுங்கள்.

👩 என்ன தான் அவசரமாக முடிவெடுத்து வெளியில் செல்ல நேர்ந்தாலும், உடனடியாக தொலைபேசியிலோ அல்லது நேரிலோ, அவரிடம், இன்ன இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு செல்லுங்கள்.

டெய்ல்’ .. எந்த சூழ்நிலையிலும் அன்பு காட்டி தன் தாய் தந்தை போல் பார்த்தாலே போதும். அருமை.

ராஜகர்ஜனை ( பெண்களுக்காக )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன