மதுரையில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி பயங்கரம்.

நூதன முறையில் இளம்பெண்கள் ஏமாற்றம் ..மதுரையில் அடுத்த ஷாக்…*

போதை தந்து ஸ்கூல் காலேஜ் மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய 3 பேர்

மிரட்சியில் மதுரை

கூல் டிரிங்ஸ்-ல் போதைப் பொருட்களை கலந்து கொடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூன்று கயவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்..*

பொள்ளாச்சி சம்பவத்தைப் போலவே நடந்துள்ள இந்த அக்கிரமம் மதுரையை மிரள வைத்துள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் ஒரு புகழ் பெற்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது..*

இங்கு படித்து வரும் ஒரு மாணவிக்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து தொடர்ந்து போன் வந்துள்ளது.. கண்டுகொள்ளாமல் இருந்த அந்த மாணவிக்கு..

போதாக்குறைக்கு மேலும் அதே நம்பரில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ்-களும் வந்த வண்ணம் இருந்தன.

இதைப் பார்த்ததும் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

அதனால் உடனடியாக நம்பருக்குப் போன் செய்தார்..

எதிர்முனையில் ஒரு இளைஞர் பேசினார்.. பேச்சில் தேன் குழைத்து பேசி

என்கிட்ட நிறைய பணம் இருக்கு… அதை உனக்குத் தர்றேன்.. ஆனால் நான் சொல்றதை எல்லாம் நீ கேட்கணும் என்று சொல்லி அவரை வசியம் செய்துள்ளார்.

*இப்படிச் சொன்னதும் மாணவியும் என்ன ஏதென்று விபரீதம் புரியாமல் தலையாட்டி உள்ளார்..*

காலப்போக்கில் அந்த இளைஞர் மாணவியை, பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார்

அப்போது தான் அதிர்ச்சி அடைந்த அவர், சுதாரித்துக்கொண்டு உடனடியாக தல்லாகுளம் போலீஸில் புகார் தந்தார்..

இதையடுத்து விசாரணை துரிதமானது..

வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் யார் என்று தேடி வந்தனர்..

இறுதியில் 3 பேரை கண்ணி வைத்து பிடித்தனர்.

*3 பேருமே மதுரையைச் சேர்ந்தவர்கள்.*

இதைப் பற்றி போலீசார் சொல்லும் போது,

சம்பந்தப்பட்ட 3 பேரும் தல்லாகுளம் பகுதியில் ரெஸ்டாரண்ட், செல்போன் கடை நடத்தி வருகிறார்கள்..

அந்தப் பகுதியில் தான் காலேஜும் உள்ளது.. அதனால் அங்கு படித்து வரும் மாணவிகள், ஹாஸ்டல் மாணவிகளைக் குறி வைத்து, அவர்களின் செல்போன் நம்பர்களையும் தேடிப் பிடித்துள்ளனர்.

இதில் காலேஜ் தவிர, ஸ்கூல் பிள்ளைகளும் அடக்கம். 3 பேரில் ஒருவர் செல்போன் கடை வைத்திருப்பதால், செல்போன் ரிப்பேர் என்று வரும் மாணவிகளின் நம்பர்களையும் எளிதாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்..

பிறகு குறிப்பிட்ட அந்த நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, போனிலும் பேச்சை ஆரம்பிப்பார்கள்..

சில பெண்கள் இந்த பேச்சில் விழுந்து விட்டாலோ, அல்லது நண்பர்கள் என்று நினைத்துப் பழக ஆரம்பித்தாலோ அவர்களை நேரில் வரவழைத்து ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துப் போய் ட்ரீட் என்ற பெயரில் விருந்து வைத்து அசத்திவிடுவார்கள்.

*கை செலவுக்கு பணமும் தந்துள்ளனர்.*

இதையெல்லாம் பார்த்து சில பெண்கள் சகஜமாகப் பேசத் தொடங்கியதும், அவர்களை ஊர் ஊராக அழைத்து சென்று ஜாலியாகவும் இருந்துள்ளனர்

இதன் பிறகு தான் கூல் டிரிங்ஸில் போதை மருந்துகளை திருட்டுத்தனமாக கலந்து தந்ததுடன், அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனையும் வீடியோவாக ரிக்கார்ட் செய்துள்ளனர்..

திரும்பவும் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளனர்

இப்படிப் பல இளம்பெண்களை இவர்கள் நாசம் செய்ததாகக் கூறப்படுகிறது..

அது மட்டுமில்லை.. ஹாஸ்டலில் இருக்கும் சில மாணவிகளுக்கு சாப்பாடு பார்சல் தருவது போல, மது பாட்டிலையும் தந்து, அவர்களையும் தங்கள் வலையில் விழ வைத்துள்ளனர். எனவும் கூறப்படுகிறது.

இப்போதைக்கு 3 பேரைத் தான் கைது செய்துள்ளனர்..

இன்னும் யாரெல்லாம் இதில் அடங்கி உள்ளனரோ? எத்தனைப் பெண்கள் சீரழிக்கப்பட்டனரோ என்ற லிஸ்ட் தயாராகி வருகிறது

கடந்த 3 வருஷமாகவே இந்த வேலையில் தான் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனராம்.. இப்போது லாக்டவுன் என்பதால் காலேஜ், ஹாஸ்டல் லீவு என்றாலும் போனைப் போட்டு அவர்களுக்கு தொல்லை தந்து வந்ததாகவும் தெரிகிறது.

காலேஜ், பள்ளி மாணவிகள் எப்பவுமே சோஷியல் மீடியாவில் இருக்கவும், அவர்களைக் கவிழ்க்கவே காம்போ ஆஃபர் சலுகைகள் என்ற பெயரில் விளம்பரங்களும் செய்துள்ளனர்.

எதிர்பார்த்தபடியே ஏராளமான பெண்கள் இவர்களைத் தொடர்பு கொள்ளும் போது, அவர்களையும் சிக்க வைத்து சீரழித்துள்ளனர்” என்றனர்..

பொள்ளாச்சியைப் போலவே நாகர்கோவில் காசி விவகாரம் வெடித்து வருகிறது..

அது சம்பந்தமான விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில் இந்த மதுரை சம்பவம் மேலும் அதிர்ச்சியைக் கூட்டி வருகிறது. என்ன வெடிக்குமோ தெரியவில்லை.

டெயல்பீஸ் :
= = = = ===
ஏமாறுபவர்கள் ஏமாறும்வரை குள்ளநரிகள் குதறிக் கொண்டுதான் இருக்கும். – ஜாக்கிரதை.. உஷார்.உஷார்..

ராஜகர்ஜனை (சமூக அவலம்)

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன