மே மாதம் : முழு ஊரடங்கா???

மத்திய சுகாதாரத் துறை பாதிப்பு அதிகமாக உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டில் அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டிலும் 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மே 2ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. புதுச்சேரியில் மே 1, 2 ஆகிய இரு தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அந்த இரு தினங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளன. இதனால் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்கிறார்கள்.

பொது போக்குவரத்தின் நிலைபாடு!!!

பொதுப் போக்குவரத்தை பொறுத்தவரை இப்போதுள்ள நடைமுறை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்கள், பேருந்துகள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படும். திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சலூன் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கான தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன