ராஜ கர்ஜனையின் யூகம் – தி.மு.கவில் தங்க தமிழ் …

 

*திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்*

*செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜனை தொடர்ந்து திமுகவில் இணைந்தார்*

நமது ராஜகர்ஜனையில் 26ம் தேதி அதிகாலைப்பதிவில் தங்கத் தமிழ்ச் செல்வன் Vs தினகரன் என்ற கட்டுரையில் நாம் யூகித்து இவரும் செந்தில் பாலாஜி வழி செல்வார் என எழுதியிருந்தோம். இன்று அது நடந்து விட்டது.

அதன் Screen Shot – கீழே..

ஆம்.

இன்று

எல்லாருடைய எதிர்பார்ப்பையும் மீறி

(ஒருவேளை ஆளுங்கட்சியில் இணைவாரோ என்ற வதந்தி உலா வந்தது).

தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிறகு அவர் அளித்த பேட்டியில்..

*”அளுமை மிக்க தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!” – என்றும்..

*திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்..

*கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது ; என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன் என கூறினார்

டெய்ல் நீயூஸ் :- _எது எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி..

 

ராஜ கர்ஜனை (அரசியல்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன