வாழ்க்கையைத் தேடி…

நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழும் வாழ்க்கை என்பது  ஏதோ மிகப்பெரிய சாதனை செய்யேண்டும் .

அதற்காகத்தான் இப்பிறவி எடுத்துள்ளோம்’ அதாவது மிகப் பெரிய சிகரம் நாம் ஏறிக் கொண்டுள்ளோம் என நினைத்துக் நமக்கு நாமே சூடு போட்டுகொள்கிறோம். ஆம் அன்பர்களே.. அது முற்றிலுமான தவறு…

மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லப் போனால் வாழ்க்கை என்பது அழகான’வயல்வெளி’…

ஆம்…
மலை ஏறிச் சென்று அதன் உச்சியைத் தொட்டு விட்டு வருவதால் என்ன விளைந்து விடப்போகிறது என்று நினைத்துப் பாருங்குகள்…..

‘உச்சியில்’ ஒன்றுமே இல்லை…

விதைத்து நீர் பாய்ச்சி…
வேலியிட்டுப் பாதுகாத்து…
கதிரறுத்து வீடு சேர்க்கும்…
‘வேளாண்மை’தான் வாழ்க்கை

ஆகவே தான் ‘வாழ்வதனை’ இப்படிச் சொன்னார்கள்…

‘பருவத்தே பயிர் செய்’…
என்று

மலையுச்சி ஏறுவது சாதனை என்பீர்கள்…
அது புறப்பகுதி

ஆனால் நாம் படைக்கப்ட்ட ரகசியம் அறிந்து  கொடுக்கப்ட்ட வாழ்க்கையை ரசித்து, சுவைத்து, அனுபவித்து பண்பட்ட முறையில் வாழ்வது தான் சாலச் சிறந்தது.

 

அதுதான் “அழகான அமைதியான வாழ்க்கை என்ற அருமையான வயல்வெளி”..

டெய்ல் பீஸ் :

மலையுச்சி ஏறுவது , சாதனை செய்வது இவையெல்லாம் வாழ்க்கையின் புறப் பகுதி என்ற போது எப்போதும் அதன் மையப்பகுதி அழகான செழுமையான வயல்வெளி தானே..-.அதாவது ருசித்து, ரசித்து அனைத்தையும் கடந்து அதனை அனுபவித்து வாழும வாழ்வு தானே..

 ராஜகர்ஜனை ( சமுக சிந்தனை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன