அகத்தை சீராக்கும் சீரகம்

நோயை விரட்டும் சீரகம் நம் அகத்தை சீர்படுத்துவது இதற்குச் சீரகம் ( சீர்+அகம்) என்ற பெயர் வந்தது.

பித்த நோய்களுக்கெல்லாம் முதல் மருந்தாக போற்றப்படும் சீரகம் அஜீரணம் கண்ணெரிச்சல் சைன சிட்டிஸ், வாந்தி விக்கல் கல்லடைப்பு என பல நோய்களை சீர்படுத்தும் சீரகம்.

சீரகம் தரும் நன்மைகள்!!!

*எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகும் என்கிறது சித்த மருத்துவம். அதாவது விடாமல் இருக்கும் விக்கலுக்கு 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் போதும் விக்கல் நின்றுவிடும்.

*உணவு செரிமானம் ஆகாமல் எரிந்து கொண்டு வரும்பொழுது சாதாரணத் தண்ணீருக்குப் அதில் உணவருந்தும் பொழுது இளம் சூடான சீரகத் தண்ணீரை அருந்தலாம்.

*சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு உப்பியது என வருத்தப்படுபவர்களுக்கு இது ஒரு அருமருந்து. சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப்பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்சனை தீரும்.

வெண்ணெயில் சிறிதளவு சீரகத்தூள் குழைத்து சாப்பிட்டுவர எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ குடல் புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா?
சீரகம் சுக்கு மிளகு திப்பிலி ஏலக்காய் இவற்றை சம பங்கு எடுத்து நன்கு மையாகப் பொடித்து அதனுடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர் இதிலிருந்து இரண்டு முதல் நான்கு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து குழந்தைக்குக் கொடுங்கள் இது நேரத்திற்கு பசியைத் தூண்டும் ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன