#IPL2021 இல் 6 பவுண்டரிகளை அடித்த இரண்டாவது வீரர் யார் தெரியுமா??

கேகேஆருக்கு எதிராக 155 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி சாதனை படைத்துள்ளார்…

முதல் ஓவரின் முதல் பந்தை வைடாக வீசினார் மாவி. அதன்பின்னர் அந்த ஓவரில் வீசிய 6 பந்துகளையுமே பவுண்டரிவிளாசிய பிரித்வி ஷா, பவர்ப்ளேயில் பவுண்டரிகளாக விளாச பவர்ப்ளே 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள்குவித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. அந்த 67 ரன்னில் 48 ரன்கள் பிரித்வி ஷா அடித்தது…

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார். பிரித்வி ஷாவுக்கு முன், 2012 ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீநாத் அரவிந்த் என்ற பவுலரின் ஒரே ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய அஜிங்க்யா ரஹானே 6 பவுண்டரிகளை அடித்தார். அதன்பின்னர் இந்த போட்டியில் பிரித்வி ஷா ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன