TASMAC அபார சாதனை.5 நாள்-700 கோடி

 5 நாட்களில் 697 கோடிக்கு மது விற்பனை:

நேற்று முன்தினம் 109 கோடி விற்பனை_*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

_தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 5 நாட்களில் 697.49 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

. தமிழகத்தில் சென்னை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில் கடந்த 16ம் தேதி 3,600 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டு மதுவிற்பனை செய்யும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வந்தது. மணிக்கு 70 டோக்கன்கள் வீதம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறையை ஊழியர்கள் பின்பற்றவில்லை._

*_இதேபோல், டோக்கன் உள்ள நபர் எவ்வளவு வேண்டுமானலும் மதுபானம் வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததால் கடைகளில் சரக்கு விரைவில் விற்றுத்தீர்ந்தது.

இந்தநிலையில், இதை சரிகட்டவும், வருவாயை மேலும் அதிகரிக்கவும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை காலை 10ல் இருந்து இரவு 7 மணி வரையில் நீட்டித்தது. இதேபோல், 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீட்டிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 109.3 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதன்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் – 28.6 கோடி, திருச்சி மண்டலத்தில் – 27.4 கோடி, சேலம் மண்டலத்தில் – 24.3 கோடி, கோவை மண்டலத்தில் – 22.5 கோடி, சென்னை மண்டலத்தில் 6.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது._*

_இதேபோல், நேற்றும் மது விற்பனை வழக்கமான நாட்களை போலவே நடந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, ஊரடங்கு உத்தரவிற்கு முன்பாக நாள் ஒன்றுக்கு 80 முதல் 90 கோடி வரையில் விற்பனை நடைபெறும். விடுமுறை மற்றும் விழா நாட்களில் இது 150 கோடி முதல் 190 கோடி வரையில் அதிகரிக்கும். ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறந்தபோது விழா நாட்கள் போல் கூட்டம் காணப்பட்டது_

_மதுவாங்க முண்டியடித்துக்கொண்டு குடிமகன்கள் திறண்டனர். ஊரடங்கினால் வேலை இல்லாமல் இருந்தவர்கள் தற்போது தான் மீண்டும் பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். எனவே, டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை வழக்கமான நாட்களை போலவே மாறியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நேற்றும் வழக்கமான நாட்களை போல தான் மதுவிற்பனை இருந்ததாகவும் கூறியுள்ளனர்_*

*_5 நாட்களில் விற்பனை எவ்வளவு?_*
🟩🟩🟩🟩🟩🟩🟦🟦🟦🟦
7ம் தேதி 172.59 கோடி_
_8ம் தேதி 122 கோடி_
_16ம் தேதி 163.5 கோடி_
_17ம் தேதி 130.1 கோடி_
_18ம் தேதி 109. கோடி__

 

மொத்த விற்பனை 697.49 கோடி_*

 

டெயல்.என்னவோ இதனால் பலவீனங்கள் சுகவீனங்கள் ஆனால் சரி…

 

ராஜகர்ஜனை (சமூக அவலம்)

🟦🟦🟦🟦🟩🟩🟩🟩🟪🟪

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன