சிவனுக்கு உகந்தது சிவராத்திரி – தேவிக்கு உகந்தது நவராத்திரி’ என்பர். இதில், வேணிற்காலமாகிய (வசந்தருது) சித்திரை மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் ஒன்பது நாள் வசந்த நவராத்திரி என்றும் கார்காலமாகிய (சரத்ருது) புரட்டாசி மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் சரத் நவராத்திரி (சாரதா நவராத்திரி) என்றும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள்களில் தேவி வழிபாடு செய்வதின் அவசியம் ஏன்? வசந்தருது, சரத்ருதுவாகிய இரண்டு ருதுக்களும் யமனுடைய இரண்டு கோரைப் பற்களுக்குச் சமமாய் கருதப்படுகிறது.
இந்தக் காலங்களில் ஏற்படும் தட்ப வெப்ப நிலையில் பெருத்த மாறுதல்களும் பருவநிலை கோளாறுகளும் ஏற்படும். அதனால் உண்டாகும் நோய்களின் தாக்கம் மக்களை வாட்டும். அவற்றினின்றும் காத்துக் கொள்ளவே தேவி வழிபாட்டை முன்னோர்கள் மேற்கொண்டனர். அம்பிகையை பல வடிவங்களில் வழிபடுகிறோம்.
அவற்றில் அம்பிகை ஒன்பது வயது குழந்தை வடிவமாக, பாலாவாக வழிபடுவது தொன்று தொட்டு வந்துள்ளது. பாலதிரிபுரசுந்தரியான அவளை “வாலை’ என்று அழைத்து வணங்கி வழிபட்டுள்ளனர் சித்தர்கள். அந்தச் சக்தி சொரூபமான பாலாவை வணங்கினால் நோய்கள் விலகும். வாழ்க்கையில் நமக்கு வேண்டிய வரங்களை நல்குவாள்.
பாலா தோன்றிய வரலாறு:
புராணங்களின் கூற்றின்படி , மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன் “பண்டன்’ எனும் அரக்கன்.
ஒரு பெண்ணைத்த விரதனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என வரம் பெற்றிருந்தான். அந்த மமதையில் தேவர்களுக்கு மிகுந்த இன்னல்களை அளித்தான்.
தேவர்கள் லலிதா பரமேஸ்வரியை சரணடைய, அசுரனுடன் போர் புரிய ஆயத்தமானாள் அம்பிகை.
தேவியை வெல்ல முடியாது என அறிந்த அவன் வலிமை மிக்கத் தனது முப்பது மைந்தர்களைப் போருக்கு அனுப்பினான் பண்டாசுரனுக்கு ஈடான அவர்களை அழிக்க ஸ்ரீலலிதா தேவியின் உடலிலிருந்து ஆவிர் பவித்தாள் அண்டத்தைக் காக்கும் அம்பிகையின் செல்ல மகளாக ஸ்ரீபாலா.
தனது அன்னையிடம் கவசங்களையும், ஆயுதங்களையும் பெற்று பண்டாசுரன் மகன்களோடு போரிட்டு அனைவரையும் போரிட்டு அழித்தாள்.
பின்பு அன்னைலலிதாவோடு அப்படியே ஐக்கியமாகிவிட்டாள் என்கிறது புராணம்.
“பண்ட புத்திர வதோத்யுக்த பாலா விக்ரமநந்திதா’ என லலிதா சகஸ்ர நாமஸ் தோத்திரத்தில் அம்பாளை வர்ணித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் ஸ்ரீ பாலசுந்தரிக்கு சிறு சந்நிதியாகக் கட்டப்பட்ட கோயிலே சிறிது சிறிதாக விரிவடைந்து அம்பிகையின் பரிபூரண அருளாலும், எண்ணற்ற குருமார்கள், மகான்களின் அனுகிரகத்தாலும் தற்போது பாலா சமஸ்தான ஆலயமாக திகழ்கிறது.
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சமஸ்தானம்:
சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் என்னும் சிறு கிராமத்தில் ஶ்ரீ பாலா ஸத்ய பீடம் கடந்த 12 வருடங்களாக, அங்கிருந்து மக்களுக்கு ஆசி வழங்குகிறாள்.கோரக்கர் சித்தரின் சீடனாகவும், வழிதுணையுடனும், சகல தேவாதி தேவர்களின் ஆசி உடன் சித்த மார்க்கம், வழியில் மிக ரம்மியாக பூஜைகள் செய்து அன்னை பாலா திரிபுரசுந்தரியை, வணங்கி வருகிறோம்.
அன்னை பாலாவை தரிசிக்கச் செல்பவர்கள் சில வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அன்னையை தரிசிக்கும் முன் –
எங்கள் பீடத்திற்கு 9 முறை வந்து 9 விளக்கு சுத்தமான நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
குறைந்த பட்சம் 48 நிமிடங்கள், அங்கு அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
9 நாட்கள் தொடர்ந்து செய்ய பின், உத்தரவின் மேல் அன்னை பாலாவை தர்சிக்க முடியும். குரு திருநீலகண்டர் ஐயாவையும் பார்க்க முடியும்.
நீங்கள் வரும்போது, முறையாக தாம்பூலம் கொண்டு வந்து வணங்க வேண்டும். அதில் பழம், வெற்றிலை, பாக்கு, பூ, தேங்காய், செக்கு நல்லெண்ணெய் மற்றும் 111/- தட்சணை வைக்க வேண்டும்.
நீங்கள் தரும் எண்ணெயை, உங்களின் பேரும், நட்சத்திரமும் கூறி, அன்னை பாலாவின் அருகே, ஒரு அனையா தீபம் ஏற்றப்படும்.
எண்ணங்கள் பரிசுத்தமாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்.
நற்பவி பாலா
அனைவரும் வரீர்!!! அன்னையின் பரிபூரண அருள் பெறுவீர்!!
இங்ஙனம்,
ஶ்ரீ பாலாம்பிகா ஸத்ய பீடத்திலிருந்து
நிவேதிதா
9/14, திருமலை நகர்,
அனகாபுத்தூர், சென்னை 600 070
பின் குறிப்பு: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் எங்கள் குரு திருநீலகண்டர் ஐயா மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.
Google Location link:
Shri Vidhya Bala ambigaa Peetam | ஸ்ரீ பாலா திருக்கோயில், X4M9+4R5, Bommai Nagar, Tiruneermalai, Chennai, Tamil Nadu 600070