அமெரிக்காவில் உயா்தர பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து ஏராளமான பொருள்களை முகமூடி அணிந்த 80 நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்

சான்பிரான்சிஸ்கோ கடற்கரைப் பகுதியில் வால்நட் கிரீக் என்ற இடத்தில் உள்ள அந்தக் கடையில் சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்த சுமாா் 80 போ் புகுந்தனா்.

கைகளில் ஆயுதங்களை வைத்திருந்த அவா்கள், கடையில் இருந்த ஏராளமான பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 25 காா்களில் தப்பிச் சென்ாக சம்பவத்தை நேரில் பாா்த்த செய்தியாளா் ஒருவா் ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான விடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவின. இந்தக் கொள்ளை சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடைக்காரா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

சான்பிரான்சிஸ்கோவின் யூனியன் சதுக்கம் பகுதியில் பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் ஒரு கும்பல் புகுந்து சேதப்படுத்தி, பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மறுநாள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மறுமொழி இடவும்