ஆடம்பர ஹோட்டல்கள். மிரள வைக்கும் பாலியல் புரோக்கர்கள்..

ஆடம்பர ஹோட்டல்களில்
அசர வைக்கும் பாலியல் கலாச்சாரம்* ..
——————–

*சென்னையில் ஆடம்பர ஹோட்டல் அறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பாலியல் புரோக்கர்கள்.*

அன்று சென்னையில் சிலுசிலுவென்று சாரல் மழை தூவி கொண்டிருந்த இளம் மாலை நேரம்..

சென்னை விமான நிலையம்

 

தென்தமிழகத்தின் பூர்வீகமாக கொண்ட ..

*ஒரு வெளிநாட்டு ஜோடி சென்னை விமான நிலையத்தில் தன்னுடைய தங்களுடைய குழந்தையுடன் வந்து இறங்குகிறது*

உடனடியாக அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டாம் என்ற காரணத்தினாலும் அந்த நபருடைய மனைவி சென்னையைச் சுற்றி பார்க்கலாம் என்று சொன்ன காரணத்தினாலும் -சரி…
*நாளை நம் சொந்த ஊருக்கு செல்லலாம் என நினைத்து ஒரளவுக்கு தரமான நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓர் ஆடம்பர ஹோட்டலில் அறை எடுத்து தங்கள் குழந்தையுடன் தங்குகிறார்கள்*.

 

 

சிறிது நேரம் ஓய்வெடுத்து இருக்கிறார்கள் ..


அதன் பிறகு அவருடைய மனைவி வெளியில் செல்லலாம் வாருங்கள் என்று கேட்ட தருணத்தில் தருணத்தில்

அவர்களது மகன் வரும் போது பார்த்த ஏதோ ஒரு விளையாட்டு பொருள் வேண்டும் உடனடியாக வாங்கிக் கொடு என்று அடம் பிடிக்கவே

அவர் தன் மனைவியிடம் “சரி நீ குளித்து விட்டு கிளம்பி தயாராக இரு ..
நாம் கீழே சென்றோ அல்லது வெளியில் சென்று உணவருந்தி விட்டு ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம் “என்று சொல்லிவிட்டு பையனைக் கூப்பிட்டு கொண்டு கீழே செல்கிறார்.

மனைவியும் கதவை தாளிட்டுக் கொண்டு உள்ளே கிளம்ப எத்தனிக்கிறார் …
நேரம் செல்கிறது

சிறிது நேரம் கழித்து

வெளியில் அழைப்பு மணி ஒலிக்கிறது.. அவர் அவசர அவசரமாக கிளம்பிய கோலத்திலேயே கதவை திறக்கிறார்..

அங்கு மிக மிகப் பெரிய அதிர்ச்சி காத்திக்கிறது அந்த பெண்மணிக்கு ..

அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரை தள்ளிக் கொண்டு கதவை இழுத்துச் சாத்திக் கொண்டு உள்ளே பாய்கிறார்*.

இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண்மணி விக்கித்துப் போனார்.
செய்வதறியாது ” Help me” என பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்துவிட்டார்.

*வந்த நபரோ மிகவும் கூலாக ஏன் கத்துகிறாய் ..ஒன்றுமே இல்லையே … அவர் சொல்லி தானே வந்திருக்கிறேன்… என்றவுடன் மேலும் பயம் தலைக்கேறி மயக்கமடைந்திருக்கிறார்.*

புரியவில்லையா எனதருமை தோழர்களே.. வந்தவன் தன் பாலியல் இச்சையை தீர்க்க புரோக்கர்களால் ஆன்லைனில் புக் செய்யப்பட்டு வந்த கஸ்டமர் .

வந்தவன் அந்த பெண்னை பிடித்துக் கொண்டு ஏதும் புரியாமல் கோபத்துடன் ஆன்லைனில் கொடுத்த புரோக்கர்கள் நம்பருக்கு போன் செய்து கேட்க அவர்கள் யாரையோ அனுப்புகிறேன் என Code WORD கொடுக்க …

இந்த களேபரம் நடந்து கொண்டு இருக்கும் போது அந்த பெண்மணியின் கணவன் உள்ளே வர …

பிறகென்ன.. டிஷ்யூம்.. டிஷ்யூம் தான்.. மயக்கம் தெளிவிக்கப்பட்டு மனைவி எழுப்பப்படுகிறார்.

விஷயம் வேறு மாதிரி செல்கிறது. அவர் அந்த ரூமுக்கு பாலியல் பசிக்காக அனுப்பப் பட்டவர். நம்பர் மாறி வந்து பெல் அடித்து அசிங்கப் படுத்தி, அசிக்கப்பட்டு விட்டார்…

அடித்து துவைத்த பயத்தில் அந்த நபர் அனைத்தையும் கக்கி உள்ளார். யார் அவரை அனுப்பியது? எந்த வழிமுறையில் இந்த தொழில் நடைபெறுகிறது எல்லாவற்றையும் கொடுத்து அவர்களின் (புரோக்கர்களின்) நம்பர்களையும் கொடுத்து(பிடுங்கி) சென்றிக்கிறார்.

இன்று வரை அந்தப் பெண்மணி பித்துப் பிடித்தது போல் உள்ளார். மனைவியின் நிலைமை அவரை மிகவும் தாக்கியுள்ளது*. குற்ற உணர்வா? காலத்தின் கோலமா அல்லது இதுதான் தமிழ் நாடா? என்று குழப்பம் மேலோங்கியிருக்கிறார்.

இதனால் மிகவும் செயலிலந்து போன அந்த NRI நண்பர் அந்த போன் நம்பர்களை வைத்து ஒன்று ஒன்றாக பல வழிகளில் விசாரிக்க விசாரிக்க புற்றீசல் மாதிரி பல விஷயங்கள்
ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரத் துவங்கியிருக்கிறது.

இது சாதாரணமாக ரூம் மாறி வந்த நிகழ்வு இது அல்ல. அவர்கள் பெரிய நெட்வொர்க் என்பதும் எல்லா ஹோட்டல்களில் பெரும்பாலான ரூம்களை பல பெயரில் எடுத்து ஆக்கிரமித்து கலக்கி வருகிறார்கள் என தெரிந்தவுடன் ஆடிப்போன அவர் அவரின் நண்பர் மூலம் நமது அலுவலகத்திற்கு போன் செய்ய ..

நாமும் களத்தில் இறங்குகிறோம்.

அந்த நபர்களின் செயல் முறையை பார்த்து அதிர்ந்து போகிறோம். அந்த நண்பர் மூலம் நாம் பெற்ற மூன்று நபர்களின் பெயர்கள் …

*Chennai All Star Hotels Online Pimp*: [ i ] Tony, [ ii ] Rahul @ Jothi and [ iii ] Kaluu.”

*சென்னை ஒருவேளை பேங்காக் – காக மாறிவிட்டதா*?..

ஒன்று மட்டும் நிச்சயம். எல்லாம் மாற வேண்டும். அவ்வளவுதான். கவனிக்க வேண்டியவர்கள் கவனித்தால் மிகவும் நல்லது.

இல்லையெனில் பூகம்பம் வெடிக்கும்…

*டெயல்*: அந்த வெளிநாட்டு நண்பர் அவர்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து வைத்திருக்கிறார் என தெரிகிறது.
கூடிய சீக்கிரம் முற்றிய கத்திரிக்காய் சந்தைக்கு வரும்.*

*அடுத்த பதிவில் (பகுதியில்) மேலும் Uல தகவல்கள் தர அவர் தயாராக உள்ளார்*. உள்ளோம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன