ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கையாளாகத்தான் இருக்கிறார்

இந்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. முதல்வரின் இந்த அறிவிப்பால் தமிழக மக்களின் இதயத்தில் பாரதியார் என்னெற்றும் நிலைத்து வாழ்வார். எட்டயபுரத்தில் பாரதியார் பேரில் நுழைவு வாயில் மற்றும் கலை அரங்கம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பொதுவாக ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கையாளாகத்தான் இருக்கிறார். ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்கிற கேள்வி எல்லாம் இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள்தான் செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, ஆளுநர் என்ற மத்திய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப் படைத்து ஆளுவது என்பது பொருத்தமற்றது. அதில் இவரா அவரா என்ற பாகுபாடு இல்லை. எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்” என்றார்.