ஆழ்மன அற்புதம்

உங்கள் மற்றும் உங்களுக்காகேவே அற்புதங்களை அள்ளித்தரும் வள்ளல் தான் ஆழ்மனம்

நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம்.

நாம் நம் ஆழ்மனதில் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதை விட நமக்கு என்ன வேண்டாம் என்பதை பற்றித்தான் அதிகம் சிந்திக்கிறோம்.*

ஆனால், இந்த பிரபஞ்சம், நாம் என்ன எண்ணுகிறோமோ, அதை நம்மிடம் தவறாமல் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.*

ஓரிரு நாட்கள் உங்கள் எண்ணங்களை கவனிக்க முயற்சி செய்யுங்கள்.*

*நீங்கள் பயப்படுபவற்றைப்பற்றி, நீங்கள் கவலைப்படுபவற்றைப்பற்றி, உங்களுக்கு தேவை இல்லாததைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா?*

*அல்லது உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளைப்பற்றி எண்ணி கொண்டிருக்கிறீர்களா?*

நீங்கள் எதைப்பற்றி அதிக நேரம் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களோ, அதைத்தான் ஈர்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.*

இன்று நம் மனதில் முதன்மையாக நேர்மறை எண்ணங்களுடன் ஒரு மகிழ்வான மனநிலையில் வாழ்ந்தால், அதே போன்ற ஒரு எதிர்காலத்தை உருவாக்குகிறோம்.*

இதுதான் ஈர்ப்பு விதியின் அடிப்படை.

*இதைக்கொண்டு நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் பெறலாம்.*

மகிழ்ச்சி*
செல்வம்*
ஆரோக்கியம்*
அன்பு*
உறவுகள்*

*நாம் ஒரு எல்லையற்ற ஆற்றல் என்பதையும், நம் உடல், மனம், உணர்வு எல்லாமே எல்லையற்ற ஆற்றல் கொண்ட பெரும் சக்தி.*

*அதுபோலவே, இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றல் கொண்ட பெரும்சக்திதான் என்பதை நாம் புரிந்து கொண்டால், நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் இந்த ப்ரபஞ்சத்திடம் கேட்டுப்பெறலாம்.*

நம் மனம் நம் வசமாகிவிடும். நாம் சொன்னதை கேட்கும்.*

*நம் மனதை கட்டுக்குள் கொண்டுவந்து நாம் விரும்பும் எல்லாவற்றையும் நம் வாழ்வில் ஈர்க்கும் நேரம் வந்துவிட்டது !*

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

ஆனந்தம். அற்புதம்.. அமிர்தம்

#வாழ்க_வளமுடன்.

ராஜகர்ஜனை (ஆன்மீகம் மற்றும் சிந்தனை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன