இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை! 

சென்னை,

தமிழகம் முழுவதும் சுமார் 40,000 முகாம்கள் மூலம் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 28,20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

கோவிட்19-ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

நேற்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என பதிவிட்டுள்ளார்.