இந்திய பாராளுமன்ற டிசைன் – சூத்திரதாரி யார்?

அழகு மிளிரும் இந்திய பாராளுமன்றம் ஆங்கிலேயர் நமக்கு கொடுத்த கொடையா?

அல்லது பிரிட்டிஷ்காரர்களின் கட்டிடக்கலை அறிவு திறமையா?

ஆம்.

சற்று கவனிப்போம் வாருங்கள்.

இந்த கீழ்கண்ட படத்தில் இருப்பது 11 ஆம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தில் மொரீனா என்னும் மலைமேல் இருக்கும் சௌசந்த் யோகினி என்னும் கோவிலின் படம்.

எட்வின் லூடியன் என்கிற பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட் 1910 – 1912 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைப் பார்வையிட்டிருக்கிறார்.
இதன் அருமை பெருமைகளை உணர்ந்த பின்னர் இந்தியாவில் இதனை அப்படியே வடிவமைத்து தற்போதைய இந்திய பாராளுமன்றத்தை வடிவமைத்தார்.

ஆனால்.. எங்குமே தான் இந்திய கோவிலால் ஈர்க்கப்பட்டே இந்த பாராளுமன்றத்தைக் கட்டியதாக குறிப்பிடாமல்.. முழு பெருமையையும் தானே அபகரித்துக் கொண்டார்.

கீழே உள்ளது தற்போதைய பாராளுமன்ற படம்

அது மட்டுமல்ல.. சுதந்திரத்திற்குப் பிறகு.. நம் இந்திய அரசாங்கம்.. அதிகாரப்பூர்வமாக இந்தியப் பாராளுமன்றம் லூடியன் என்னும் பிரிட்டிஷ்கார ஆர்க்கிடெக்ட் – ன் மனதில் உதித்த டிஸைன் என்று அறிவித்தது.
என்ன காரணமோ தெரியவில்லை.
ஒரு வேளை உண்மை மறைக்கப் பட்டிருக்கலாம்.

(அல்லது அவன் எட்வினா மௌண்ட்பேட்டனின் உறவினனாக இருந்திருக்கலாம்)
.
அப்படி என்ன அதிசயம் அந்த கோவிலில் என்கிறீர்களா?

இந்த கோவில் அப்போது கணிதத்தைப் பற்றியும் ஜோதிடத்தைப் பற்றியும் சூரியனின் நகர்விற்கு ஏற்ப நிகழ்வுகளையும் அதனைப் பற்றி போதிக்கும் இடமாகத் திகழ்ந்ததாம்.

இந்த கோவிலின் வடிவமைப்பானது.. எந்த நில அதிர்வையும் தாங்கக் கூடியதாகவும், அதனுடைய வட்ட வடிவமான கட்டமைப்பு இதுவரை எந்த சேதத்தையும் பல நூற்றாண்டுகளாகச் சந்தித்தது இல்லை என்றும் தெரிகிறது.

இத்துனை அம்சங்களையும் கவனித்துத் தான் ஒரு வேளை லூடியன் இதை வடிவமைத்திருப்பாரோ?

எது எப்படியோ அதி அற்புதமான கலை பொக்கிஷம் நமக்கு கிடைத்துள்ளது.

ராஜ கர்ஜனை ( இந்தியா )

டெயல் பீஸ் – .. –

இந்த கோவில் கச்சஹபக்ஹட அரசர் தேவபாலா என்பவரால் 1055 – 1075 இல் கட்டப்பட்டது. தற்போது இங்கு எந்த பூஜையும் நடப்பதில்லை. 😭😭

(TrueIndology)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன