இனிமேல் தொலைகாட்சியில் கல்வி!! ஆன்லைன் வகுப்புகள் மாற்றாக ஒரு புதிய முயற்சி!!!

கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித்தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளார்.

 

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து வகை பள்ளிகளிலும் கற்றல்-கற்பித் தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக இணையவழியில் கற்பித்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார் பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலமாகவும் ஆசிரியர்கள் பாடக்குறிப்புகளை வழங்கு கின்றனர்.

 

கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நீடிப்ப தால் தமிழகத்தில் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரி வித்திருந்தார். மேலும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இதர மாற்றுவழிகள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என கூறியிருந்தார்.

 

இடம்பெ இந்தநிலையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 2021-2022-ஆம் கல்வியாண் டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்தக் காணொலிகளில் தொடக்கக்கல்வி முதல் மேல் நிலைக்கல்வி வரையிலான பாடப்பகுதிகள்றும். கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு தளங்களில் தயா ரிக்கப்படும் இந்தக் காணொ லிகள் கடந்த ஆண்டைப் போன்றே 10-க்கும் மேற்பட்ட  தனியார் தொலைக்காட்சி களுக்கும் வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியின் யு-டியூப் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.

விலையில்லா பாடநூல்கள்: கல்வித் தொலைக்காட்சி மூலமாக புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் சார்ந்த காணொலிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை காலை தொடங்கி வைக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்களையும் அவர் வழங்கவுள்ளார். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்பட கல்வித் துறைச்சார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன