இன்பமோ துன்பமோ அனுபவிக்க போவது நீங்கள்

*கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது.கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.*

*அதே போல, வாழ்வின் எந்த பிரச்சனையும், உங்களை பாதிக்கவே முடியாது. நீங்கள் அனுமதித்தால் தவிர…*

*யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள். சோதித்துப் பாருங்கள், அதை பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்.*

*உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில், அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை.*

 *வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை. ஆனால், வந்த எதுவும் எதையும் சொல்லி கொடுக்காமல் செல்வதில்லை.*

*உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய் தான். புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர் தான்..!!*

*வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதும், தடம் மாறும் போதும் நினைவில் கொள்ள வேண்டிய வரிகள். எல்லாம் சில காலம் தான். எதுவும் நிலை இல்லை. இதுவும் கடந்து போகும்.*

*கண்ணீர் சிந்த வைக்கும் உறவு ,நட்பை கண்களில் வையுங்கள். கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்ளும் உறவு நட்பை இதயத்தில் வையுங்கள்….!!!!*

*சிறு சிறு கிறுக்கல்கள் சேர்ந்து அழகிய ஓவியமாகும்…!!!*

*சில பல சறுக்கல்கள் சேர்ந்து சிறந்த சாதனையாகும்…!!!*

*கிறுக்கல்கள் இல்லாமல் ஓவியம் இல்லை…!!!* 

*சறுக்கல்கள் இல்லாமல் சாதனையும் இல்லை…!!!*

*கற்றுக் கொள்ளவும்,கற்றுக் கொடுக்கவும் தான் நாம் இந்த பூமியில் பிறந்தோம்…..*

*குறைகளை சொல்லிக் காயப்படுத்த அல்ல… தவறு என்றால் கற்றுக் கொடுங்கள்… சரி என்றால் கற்றுக் கொள்ளுங்கள்….*

*இன்பமோ துன்பமோ அனுபவிக்க போவது நீங்கள். எனவே,வாழ்க்கையில் எடுக்கும் முடிவும் உங்களதாகட்டும்….!!!!*

*வாழ்க_. வளர்க …*

மறுமொழி இடவும்