உடல் நலம் – காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டியவை

உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதிலும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவால் உடல் மற்றும் மனதுக்கு, புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கிறது.

அதையடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு உகந்த பொருட்களை பார்க்கலாம்.

 

காலையில் தேன் சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். மனநிலை மேம்படும். இதனால் அன்றைய தினத்தில் செய்கின்ற செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.

 

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலை சரி செய்யும்.

 

தேங்காய் பால் எப்போது குடித்தாலும் உடலுக்கு நல்லது. வெறும் வயிற்றில் தேங்காய் பால் அருந்தி வர வயிற்றில் உள்ள புண்கள் விரைவில் ஆறும்.

 

சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

 

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது.

 

இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

 

காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.

 

தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

முளைகட்டிய பயறில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

 

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஓட்ஸ் சாப்பிடலாம். இது, வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. கரையக்கூடிய நார் சத்துகள் இருப்பதால் கொழுப்பு குறைவதுடன், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய்யை இரண்டு சிட்டிகை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து வந்தால் பல உடல் உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆயில் புல்லிங் என அழைக்கப்படும் இந்த பயிற்சி தற்போது மிகப் பிரபலமாக உள்ளது.

மறுமொழி இடவும்