ஊட்டியில் பச்சை கம்பளம் விரித்தார் போல் காணப்படும் புல் மைதானத்தை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்

ஊட்டியில் 2வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், மழை காலநிலையால் குளு குளு சூழல் நிலவி வருகிறது. இதனால், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தளங்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படுகிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் நகருக்கு வெளியே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள 9வது மைல் பகுதியை காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பச்சை கம்பளம் விரித்தார் போல் புல் மைதானம் மற்றும் மலைகள் உள்ளன. இப்பகுதி ஷுட்டிங் மட்டம் என அழைக்கப்படுகிறது. புல் மலைகளை காணவும், அதில் விளையாடவும் தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

குறிப்பாக, கேரள மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வழியில் உள்ளதால், இவ்விரு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு ஷுட்டிங் மட்டத்தில் முகாமிட்டு இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

தற்போது பெய்த மழை காரணமாக ஷுட்டிங்மட்டம் பகுதியில் பசுமை காணப்படுவதால் இப்பகுதி தற்போது களைகட்டியுள்ளது.

மறுமொழி இடவும்