எப்படி எல்லாம் விளக்கு ஏற்றலாம்… தெரிந்துகொள்வோம்

எப்படியெல்லாம் தீபம் ஏற்றலாம். தீபத்தை எங்கெல்லாம் ஏற்றினால் எந்த கடவுளர்களின் அருளை பெறலாம் என பலரும் நினைத்திருப்போம்.

பொதுவாக, விளக்கு அல்லது தீபம் என்பது அறிவு, நேர்மறையான எண்ணங்கள் போன்றவையின் அம்சமாகும்.

அதுமட்டுமின்றி தினசரி வீடுகளில் மண் விளக்குகளால் தீபம் ஏற்றுவது மிகுந்த நன்மை தரும்.

அறிவு, ஞானம், செளபாக்கியம் ஆகியவற்றின் அறிகுறியாக நெய் தீபம் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் குறிப்பாக இந்து மரபில் அனைத்து விதமான புனித காரியங்களும் சமூக நிகழ்ச்சிகளும் விளக்கினை ஏற்றியே தொடங்கப்படுகிறது.

இவ்வாறு விளக்கினை ஏற்றுவதால் நாம் அந்த நிகழ்விற்கு அல்லது காரியத்திற்கு கடவுளை அழைக்கிறோம் என்று பொருள் கொள்ளபடும்.

வாழைத்தண்டினால் சில சமயங்களில் விளக்கு ஏற்றப்படும். அப்படி செய்தால் நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்த பிழைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நம் முன்னோர்களுக்கு நாம் இழைத்த பாவங்களிலிருந்தும் நமக்கு முக்தி கிட்டும்.

அடுத்ததாக பஞ்சு திரி எளிதில் கிடைக்க கூடியது இதனை வைத்து விளக்கு ஏற்றுவதால் நமக்கு சகல விதமான நன்மைகளும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

அடுத்து மஞ்சள் துணியை திரியாக வைத்து விளக்கு ஏற்றினால் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் அடுத்த தாக தாமரை தண்டினால் விளக்கு ஏற்றினால் கடந்த பிறவியின் கர்மாக்கள் கூட அழிந்து போகும் இந்த புதியபிறவியில் சுபிக்‌ஷமும், நல்வாழ்வும் அமையும்.

சிவப்பு ஆடையை திரியாக்கி விளக்கேற்றினால் குழந்தையில்லா பிரச்சனை தீரும்.நெய்யும் அதில் எரியும் சுடரும் இலட்சுமி தேவியை குறிப்பதாகும்.

அந்த தீபத்தால் பரவும் வெளிச்சம் சரஸ்வதியை குறிக்குறிது அந்த தீபத்தில் எழும் சூடு தேவி மஹாசக்தியை குறிக்கிறது. எனவே இலட்சுமியின் அருளை பெற விரும்புபவர்கள் சுத்தமான பசுநெயினால் தீபமேற்றுவது தக்க பலனை கொடுக்கும்.

அதுவே கணபதி வழிபாடு எனில், தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றலாம். தொடர்ந்து எள்ளு எண்ணையில் தீபம் ஏற்றுவது நம் முன்னேற்றத்தை தடை செய்யும் சகல விதமான இடர்களிலிருந்து, சனியின் தாக்கத்திலிருந்தும் நமக்கு விடுதலையை தரும்.

மறுமொழி இடவும்