ஒரு பிளேட் ஆன்லைன் பிரியாணி – ரூ.40,000 /-

சூடாக பிரியாணி –  சுடச் சுட பிரியாணி – கம்மி விலையில் பிரியாணி – ஆன்லைன் பிரியாணி..

ருசியாக ,ஆசையாக அதுவும் ரூபாய் 76 – தான் விலை ஆன் – லைனில் என்றால் யாருக்குத்தான் பிரியாணி சாப்பிட தோன்றாது. அதே போல் நினைத்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பிரியாணி பிரியர்கள் குதிப்பாக ஆன்லைனில் ஆர்டர் செய்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஒரு கிலோ பிரியாணி என எந்த பிரியாணியை ஆர்டர் செய்தாலும் அதன் மதிப்பு 300 ரூபாயை தாண்டாது.

ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா ஒரு பிளேட் பிரியாணிக்காக ரூ. 40 ஆயிரம் செலவு செய்துள்ளார் என்றால் தலையை சுற்றுகிறதா இல்லையா?

சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரியா இவர் நேற்று முன் தினம் ஆன்லைனில் ஹைதராபாத் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். பிரியாணிக்கான பணம் ரூ.76 மட்டும் என்றவுடன் ரூபாயையும் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணி கேன்சல் செய்யப்பட்டு வரவில்லை. பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது, தொலைபேசியில் பேசியவர், 76 ரூபாய் பெரிய தொகை இல்லை , அதற்கு ஆன்லைனில் பிரியாணி கொடுப்பதே அரிது.. நிறைய ஆர்டர் என்பதால் Cancel ஆகியிருக்கலாம்.

மேலும் பணம் திரும்ப வேண்டும் என்பதால், கம்மியான தொகையை அதாவது ௹76/_ ஐ நாங்கள் அனுப்ப இயலாது. எனவே மேலும் ரூ.5ஆயிரம் ரூபாயை செலுத்தமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு செலுத்தினால், 5 ஆயிரத்து 76 ரூபாயாக உங்கள் அக்கவுன்ட்-ல் டெபாசிட் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை அப்படியே நம்பிய பிரியா, 5 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் பிரியாவை தொடர்பு கொண்ட அந்த நபர், உங்கள் கைப்பேசிக்கு வரும் ஓடிபி நம்பரை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓடிபி நம்பரை தெரிவித்த பிரியாவிடம் சற்று நேரம் கழித்து

சரியாக வரவில்லை , என பிரியாவிடம் சாமர்த்தியமாக பேசி இதேபோல், 8 முறை 5 ஆயிரம் ரூபாயை செலுத்த  வைத்திருக்கிறார்கள்.

பிரியாணிக்கு பதிலாக செலுத்த வேண்டிய பணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், பிரியாணியும் வரவில்லை, பிரியாணிக்காக செலுத்திய பணமும் வந்தபாடில்லை.

இதன் பின்னர் தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியா, செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார்.

இதனையடுத்து, வடபழனி காவல் நிலையத்திற்கு சென்ற பிரியா நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பார்த்தீர்களா.. ஆன்லைன் உலகத்தை .

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை எப்படியாவது ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்..

விழித்துக் கொள்ளுங்கள் மக்களே…

ராஜகர்ஜனை ( சமூக விழிப்புணர்வு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன