கருப்பை – பெண்மையின் பொக்கிஷ சுருக்குப்பை

பெண்மை என்பது பொக்கிஷம். அதிலும் அந்தப் பெண்மையின் தாய்மை என்பது கடவுள் நமக்களித்த மிகப் பெரிய வரம்..

ஆம் நண்பர்களே.. பெண்கள் மட்டுமல்ல..

அந்த பெண்மையை தாய்மையாக்கும்  ஆண்களும் அறியவேண்டிய மிகப்பெரிய விஷயம் தான் பெண்களின் கருப்பை .

பிறகு  பெண்கள்  கருப்பை நோய்களாலும், குழந்தையின்மையினாலும் சில நேரங்களில் கருப்பையை நீக்கும் அளவிற்கு கூட மருத்துவமுறைகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள் ஏன்? எதனால்??  என்பதைத்தான் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய, செய்தி .. மட்டுமின்றி கூடுதலாகப் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமான செய்தியும் கூட ….

மாதவிலக்கு நாட்களில் மகளிர் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். ஏன் தெரியுமா?

 உதிரப்போக்கு என்பது மலம் கழிப்பது போன்ற சாதாரண நிகழ்வு இல்லை. உதிரப்போக்கை ’கழிவு’ என்று சொல்லக்கூடிய கொள்கையும் இப்போது இருக்கின்றது.  ஆனால் உதிரப்போக்கு என்பது நிச்சயமாகக் கழிவு கிடையாது.
பெண்களின் உதிரத்தின் வழியாக வெளியேறுபவை யாவுமே உயிரணுக்கள் தான்…

உணவில் கிடைக்கும் ஆற்றலை உயிரணுக்களாக மாற்றும் பணி கருப்பை மண்டலத்தில் நிகழும்.

உயிரணுக்கள் உருவாக வேண்டுமானால் ஒட்டுமொத்த உடலின் பருவநிலையும், உடலில் உள்ள எல்லா விதமான ஆற்றல் மண்டலங்களும் சீராக இருக்க வேண்டும்.

 

மேலும் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும்.

மாதவிலக்கு நாட்களில் வெளியாகும் உதிரத்தில் கணக்கிட இயலாத உயிரணுக்கள் உள்ளன. அவை எல்லாம், மனித உயிரணுக்கள் என்று தெளிவாகக் கூற இயலாத நிலையில் உள்ளவை.

சாப்பிட்ட பிறகு சிலமணி நேரத்தில் அது மலமாகி வெளியேறி விட்டது என்பது போன்ற செரிமான வேலையை அது செய்யவில்லை. உயிர் ஆற்றலை, உயிர் அணுக்களை, சுரப்பிகளைத் தூண்டி, சீர் செய்துவிட்டு, தன்னுடைய சுத்திகரிப்பு பணியை முடித்துவிட்டு, தேவைக்கு அதிகமான உயிர் ஆற்றலையும் தக்க வைத்துக் கொள்வதுதான் கருப்பை.

 

அதற்கு நிச்சயமாக ஆசனவாய் கிடையாது. சிறுநீரகம் கிடையாது.

கருப்பை என்பது உயிர்களைத் தாங்கி வளர்க்கும் உறுப்பு. இதைத் தயவுசெய்து மனதில் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது கழிவு அல்ல. கழிவு என்று புரிந்து கொண்டதன் விளைவாகத்தான், ஏதோ மலம் கழிப்பதைப் போல அதைப் பற்றிய அணுகுமுறை இந்தச் சமூகத்தில் உருவாக்கப்பட்டு,

அதற்கெல்லாம் எதற்கு ஓய்வு என்ற திமிர் பிடித்த மனோநிலை இப்போது உருவாக்கப்பட்டு உள்ளது.

அதனால்தான் மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் நம் தாத்தா – பாட்டிகள்

இவ்வாறு ஓய்வு எடுக்கும் முறையில், குறுக்கே உலக்கையைப் போட்டு வைப்பது, யாரும் தொடக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிப்பது ஆகியவை போன்ற  நம்பிக்கைகள் பிற்காலத்தில் பெருகிவிட்டன. அதற்கு காரணமும் முற்றிலும் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது தான்.

இவை எல்லாம் பெண்களுக்கு எதிரான சிந்தனைகள் மற்றும் தொட்டால் தீட்டு, கோவிலுக்குப் போகக்கூடாது என்பவையெல்லாம் ஒழித்துக் கட்டப்படவேண்டிய பழக்கவழக்கங்கள் என்று நினைத்துக் கொண்டு  நமது மரபு அறிவியலை நிராகரிக்க முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.

மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு எடுக்கும் பழக்கத்தை நிறுத்திய பிறகுதான் கருப்பை மருத்துவமனைகள் பெருகத் தொடங்கின.
கருப்பைக்கென்று மருத்துவ நிபுணர்கள் எப்பொழுது உருவானார்கள்? நாப்கின் அறிமுகத்திற்குப் பின்புதான். கருப்பைக்கென்று ஸ்கேன் எந்திரங்கள் இங்கே வந்தன. நாப்கின்களுடைய வருகைக்கு முன்பு அதெல்லாம் இங்கு கிடையாது.
உதிரப்போக்கு நாளில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று, அன்புள்ளம் கொண்ட ஒருவரால் கூற முடியும். தொழில் நிறுவங்களை நடத்தும் முதலாளிகள் அப்படிச் சொல்ல முடியுமா? அவர்களுக்கு பெண்கள் பணிக்கு வர வேண்டும்; தொழிற்சாலைக்கு வர வேண்டும்; எடுபிடி வேலைக்கு வர வேண்டும்; அலுவலகத்திற்கு வரவேண்டும். அவர்கள் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுப்பு எடுப்பதை ஒரு முதலாளியால் சகித்துக் கொள்ள முடியாது.

நாம் முன்வைக்கும் கருத்துகள் கண்டிப்பாக, முதலாளிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல; மனிதர்களுடைய பக்குவமற்ற அன்பற்ற சிந்தனைகளுக்கு எதிரானது. எவராக இருந்தாலும், ’உங்களுக்குச் சோர்வாக உள்ளதா? ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள் நம் வீட்டின் பெரியவர்கள் .

ஏன்?ஏன் ??

இது தத்துவமல்ல மிக எளிமையான சொல்தான். இதைச் சொல்வதற்குக் கூட மனமில்லாத சமூகத்தில் பிறந்த பெண்கள் இன்று கருப்பை நோயால் அவதிப்படுகிறார்கள்.

= = = = = = =

முக்கியமாக தாய்க்குலமே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. மாதவிலக்கு நாட்களில் 100 சதவிதம் ஓய்வு தேவை…

தந்தை குலம் மட்டும் இதை புரிந்து கொள்ள விதிவிலக்கல்ல..
முழுதாக ஒய்வளியுங்கள் பெண்களுக்கு …அவர்களின் விலக்கு நாட்களில் …
ராஜகர்ஜனை (மகளிர் நலம்)