கல்விக்காக கற்பை பறி கொடுத்த தாய்..

தன் குழந்தைக்கு ஆங்கில மொழிக்கல்வி வேண்டும் என்பதற்காக தன்னையே இழந்திருக்கிறார் ஒரு தாய்.

நாம் இந்த அவலம் அரங்கேறியிருப்பது பெங்களூரூவில்
.
பட்டி தொட்டிகளெல்லாம் ஆங்கிலவழிக்கல்வி மோகம் அடங்காப்பிடாரி போல் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அந்தத் தாய் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?

ஆம்

தன் மகளுக்கு பிரபலமான அந்த தனியார் பள்ளியில் தான் குழந்தைக்கு சீட் வாங்கி தரக் கோரி ..
ராம் நகரில் வசித்து வரும் தன்னைத்தானே சமூக சேவகர் என்று கூறிக்கொள்ளும் ,
அது மட்டுமல்லாமல் கன்னட சங்கேதனா என்ற அமைப்பில் இருக்கும் ஆனந்த் என்பவரை அணுகி இருக்கிறார் அந்த பெண்மணி.

கயவன் கள்ளத்தனமான கணக்கு போட்டு விட்டான்

நயவஞ்சகமாக பேசி தன் வலையில் சிக்க வைத்தாள் அந்த ஒநாய் .

மேலும் அந்த கொடிய மிருகம் அவ்வப்பொழுது அந்தப் பெண்மணியை தன் வீட்டிற்கு வர வைத்தது

சீட் வாங்கித் தருவதாகவும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் அது வரை பொறுத்திரு..

என கூறி நைசாகப
பேசி

முதலில் வீட்டு வேலையை செய்வது துணிகளை துவைத்துக் கொடுப்பது, சென்று வருவது போன்ற வேலைகளை செய்ய பணித்தது. _ ஆனந்த் என்ற சாத்தான்.

கடைசியில் இந்த நிலைமை படிப்படியாக மேலே போய் அந்தப் பெண்மணியை பலாத்காரம் மற்றும் பாலியல் பலாத்காரம் அவ்வப்பொழுது செய்து தன் வக்கிரத்தை தனித்துக் கொண்டு வெளியில் தெரியாமல் இருந்திருக்கிறான் அந்த கொடியவன்.

சீட் கிடைத்தால் போதும் என்று வந்த அந்தப் பெண்ணும் ஏதும் சொல்லமுடியால் தவித்துக் கொண்டு செய்வதறியாமல் இருக்கும் போது நிலைமை உச்சத்திற்கு சென்று இருக்கிறது


அவனுடைய பலாத்காரத்தை அப்படியே செல்போனில் படம் பிடித்து அதை வீடியோவாக்கி அவ்வப்பொழுது மிரட்டியும் வந்திருக்கிறான் அந்த கயவன்

விஷயம் வெளியில் கசிந்தால் உன்னை மட்டுமல்லாது உன் குழந்தையையும் சேர்த்து கொன்று விடுவேன் என்று கொடுமையாக மிரட்டி தனியறையில் அடைத்து சித்ரவதை செய்து இருக்கிறது இந்த பசுத்தோல் போர்த்திய புலி

..

ஐந்து நாட்களுக்கு பிறகு எப்படியோ தப்பித்து வந்த அந்தப் பெண்மணி தன்னுடைய உறவினர்களிடம் வேறு வழி தெரியாமல் விழி பிதுங்கி அத்தனையையும் கொட்டியிருக்கிறார்.

பிறகென்ன மாமியார் வீடு தான். போலீஸ் கடுமையாக கவனித்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளியது.

சமூக சேவகர் என்ற போர்வையில் இதேபோல் எத்தனையோ பேர் உலவிக் கொண்டிருக்கிறார்கள்

மட்டுமல்லாது இதே போன்ற கொடுமைகளை எதையும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து

எத்தளையோ அந்தப் பெண்மணி போல பல அப்பாவிகளும் ஏனோ அடங்கி போய் தான் இருக்கிறார்கள்

உண்மையில் சமூகத்திற்கு நல்லது செய்ய மனித நேயத்துடன் பல பேர் இருக்கும் இந்த நாட்டில் இதே போல் சில புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய ..

மக்களாக நாம் தான் மிகவும் ஜாக்கிரதையாக குறிப்பாக பெண்கள் படு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கட்டுரை .

விழிப்புடன் இருப்போம்.

நன்றி

ராஜ கர்ஜனை ( சமூக நலம்)

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன