‘கவிமணி விருது’ பெற, இளம் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை :

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில், ஆண்டுதோறும் மூவரை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழுடன், கவிமணி விருது வழங்கப்படும் என, சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.

அதன்படி, விருது பெற பொது நுாலக இயக்ககம், இளம் படைப்பாளிகளிடம் இருந்து, தமிழில் கட்டுரைகள், சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.

படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள், www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியில் இருந்து, சுய விபர படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

அதை முழுமையாக பூர்த்தி செய்து, டிச., 31க்குள் தங்கள் படைப்புகளுடன், ‘பொது நுாலக இயக்ககம், 737/1 அண்ணா சாலை, சென்னை – 2’ என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது dpltnservices@gmail.com என்ற ‘இ – மெயில்’ முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமாரை, 99414 33630 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்