காத்திருப்பும் வாழ்க்கை ரகசியமும்…

பல தருணங்களில், பல இடங்களில், பல விஷயங்களில் நாம் காட்டும் வேகம் விஷமத்தனமாக மாறி சில கெட்ட விஷயங்களை நம்மிடையே நடத்தி விடுகிறது.

அதனால் தேவை எப்படியோ அப்படி காத்திருககவும் வேண்டும் அல்லவா?

வாருங்கள் காத்திருக்கப் பழகுவோம்..

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷பசிக்கும் வரை காத்திருப்போம்.பல வியாதிகளைத் தடுப்போம். உடல் ஆரோக்கியம் பேணுவோம்.

 

உடல் நீர் கேட்கும் வரை காத்திருப்போம்..உடலின் உள்ளே நடக்கும் போரைத் தடுப்போம்.

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை
காத்திருப்போம்… அடுத்துவரும் பெயர் தெரியாத நோயில் இருந்து தப்பிப்போம்..சுவாசப் பாதையில்  இருக்கும சளி வெளியேரும் வரை காத்திருப்போம் – மிகப் பெரிய நெஞ்சக நோயில்  இருந்து மீள்வோம்.

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திருப்போம். சீர்படுத்திய பின் அதற்கு நன்றி நவில்வோம்.உலையில் அரிசி வேகும் வரை காத்திருந்தால் தான் வேகாத சோற்றை தின்று வயிறை நோகடிக்காமல் இருக்க முடியும்..

பயிர் விளையும் வரை காத்திருப்போம். பண்பட்ட  மணிகளை அறுவடை

செய்வோம்.

கனி கனியும் வரை காத்திருப்போம்.. அதே போல் காதல் கனியும் வரை காத்திருப்போம்.அதன் முழுமையான ருசியையும், சக்தியையும் உணர்வுகளையும் உள்வாங்குவோம்..

செடி  மரமாகும் வரை காத்திருப்போம்.. பல நன்மைகளைை இயற்கை மூலம் பெற்றிடுவோம்.தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திருப்போம்.. சுத்தமான ஆரோக்கியம் பெறுவோம்..

நம்மில் கெட்டவைகள் நீங்கும் வரை காத்திருப்போம். ஆரோக்கிய அற்புத வாழ்வைப் பெறுவோம்..

தேவையானவை நம் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திருப்போம்.. மிகப் பெரிய நிம்மதியை நிதர்சனமாக உணர்வோம்…..

உணவு தயாராகும் வரை காத்திருப்போம்.. அற்புதமான அறுசுவையை ருசிப்போம்.

இது நம்முடைய வாழ்க்கை
ஓட்டப்பந்தயம் அல்ல
ஒடாதீர்கள்..

நில்லுங்கள்..
விழித்திடுங்கள்..
பார்த்திடுங்கள்..
தேடுங்கள் ..
ரசியுங்கள் ..
சுவையுங்கள்..
உணருங்கள்…
நன்றாக பேசுங்கள் …
அற்புதமாக அன்புடன் பழகுங்கள் .
விரும்புங்கள்  இந்த உலகத்தை .. எந்த விதமான வெறுப்பும் இல்லாமல்…

நம்மிடையே காத்திருக்கும்  பழக்கம் இல்லாததனாலேயே,
நம் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும், செயல்பாடுகளும் நம் மேல் திணிக்கப்படுகிறது.

நம்முடைய மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் நம மேல் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

அவசரம் நம்மையும், நம் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறந்து விட வேண்டாம்..

காத்திருப்பு என்ற அருங்கலையை கற்றுக் கொண்டால்
நம் ஆயுள் வரை அற்புதங்களும் நம்முடனே பயணிக்கும் .

காத்திருக்க பழகுவோம்.. அற்புதமாக வாழவும் பழகுவோம்..

ஆனந்தம் – அற்புதம்.. அமிர்தம் …

ராஜகர்ஜனை ( சமூக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன