கிராமத்து கிருஷ்ணவேணியும்- நகரத்து நந்தினியும்..

நமது சென்னையில் ஒரு குடியிருப்பு வளாகம். ஒருவர் முகம் ஒருவர் பார்க்காத இந்த நகர வாழ்க்கையில் எப்படியோ நட்பாகி விட்டார்கள் நமது நந்தினியும் ,கிருஷ்ணவேணியும்..

முழுக்க முழுக்க கிராமமும் அதைச் சார்ந்த சூழ்நிலை கிருஷ்ண வேணிக்கு …
நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கை சூழ்நிலை நந்தினிக்கு …
இவர்கள் பல விஷயங்களை வரும் காலங்களில் நமது ராஜ கர்ஜனையில் பேச போகிறார்கள். பொறுத்திருப்போம்.
வாருங்கள்..  இருவரும் வாக்கிங் செல்லும் போது Park-ல் உள்ள. சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து எதைப் பற்றியோ காரசாரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். கேட்போம் வாருங்கள் i.

நாகரிகம் அநாகரீகம் பற்றி அவர்களிடையே பேச்சு நீடிக்கிறது.-

ஏன் நந்தினி க்கா.. இந்த மாதிரி சாயங்காலம் நேரத்திலே எங்க கிராமத்திலே வாசல் பெருக்கி கோலம் போட்டு கிணற்றுல தண்ணிர் எறச்சி சோறு பொங்கி அத்தினி பேரும் நிலாவல உட்காந்து சாப்பிட்டு வெற்றிலை_பாக்கு போட்டால் எப்படி தெரியுமா இருக்கும்.. ஆன இங்க பாரு தின்னது செரிக்காம வாக்கிங் போயிட்டு வாயில் கண்ட பாக்கையும் போட்டுகிட்டு பத்தாது என சாப்பாடு முடிந்தவுடன் பீடா போட்டுக்கிட்டு நகரத்தான் – ன் து பேசிட்டு திரியிறாங்க என்றாள் கிருஷ்ணவேணி i

இடை மறுத்துப் பேசிய நந்தினியைப் பார்த்து .பாருக்கா நாங்க பச்சை குத்தினால் கிராமத்தான் அசிங்கம்-னு சொல்றாங்க.. அதையே தான் நீ “டாட்டூ” ங்கிற பேர்ல உன் கையில்  போட்ருக்கே.. இது தான் நகரத்தான் ஸ்டைலோ என கிண்டலடித்தாள் கி.கி.

ம் ம்.. சரி..மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்-னு சொன்னியே ..

இப்ப மெஹந்தி என்ற பேர்ல எதையோ கெமிக்கல் கலவைதானேக்கா இப்ப உன் கையிலே போட்டுக்க என்றது கி.கி

நகரம் மட்டும் சும்மா இருக்குமா என்ன ?

அது சரி இங்குள்ள வசதி, வண்டிகள் எல்லாம் அங்கே உண்டா என்றாள் நகரத்து.நந்தினி..

அக்கா ஒன்னு புரிஞ்சுக்கோ.. இங்க  உடம்ப குறைக்க “சைக்கிளிங் ” ங்கிற பேர்ல் நிக்கிற சைக்கிள் ஓட்றீங்க.. ஆனா அங்க எங்க உதவிக்கு தான் ஓடுற சைக்கிளை பயன்படுத்துனோம்..- என்றது  கி.கி ..


மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம்-னு சொல்றீங்க.. அதையே தான் Chemical பொடி தூவி ஹோலியோ, ஓலியோ – ன்னு நகரம் பூரா கொண்டாடுறீங்க…

நாங்க மஞ்ச பச்சை , ஊதா கலரு சட்டை போட்டா அவன் கிராமம்ன்னு  ஊத்திராங்களே… ஆனால் இப்ப டிசைன், டிசைனா கண்வலிக்கிற மாதிரி அதே  மஞ்சள் பச்சை சட்டை தானே இப்போ இங்க போட்டால் நகரம் – ன்று முத்திர குத்துரீங்க.

போனா போது..கிழிந்த ஆடை போட்டால் கிராமம் – ங்கிறீங்களே.. கிண்டல் பண்றீங்களே..

நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரமா.?  ?

கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம் ..

இடுப்பு ஜட்டி தெரிய பேண்ட் அணிந்தால் அவன் தான் நகரம்..

அக்கா நாங்கல்லாம் மங்களகரமாக வெளியில் போனா மஞ்சப்பை எடுத்திட்டு போவோம். அதையும் கிண்டல் பண்ணினீங்களே .இப்ப நீங்க நகரத்திலே பிளாஸ்டிக் பைகளை கைகளில் புடிச்சிட்டு அலையிரிங்களே…

எவ்வளவு பாதனை தெர்யுமா? என்று முச்சை விடாமல் பேசிய கிருஷ்ண வேணி சற்று ஆசுவாசமானாள்.

இப்ப சொல்லுக்கா எது நாகரீகம் ? எது ஆரோக்கியம்.??

 

நாளக்கி பேசலாம் வா என அழைத்து சென்றாள் – ந.ந.(நகரத்து நந்தினி)
டெய்ல் பீஸ் :-
===========
சிறிது நேரம் ஒட்டுக் கேட்டது தான் இது …இன்னும் நிறைய வரும் – கி.கி / ந.ந உரையாடல்கள்.

ராஜகர்ஜனை ( சமூகம் )