குஜராத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல்  பதவியேற்கிறார்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பிற்பகல் பதவியேற்கிறார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வரைத் தேர்வு செய்வது குறித்து நேற்றும் இன்றும் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் கூறுகையில், “குஜராத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல்  பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவிக்கு யாரும் இன்னும் தேர்வு செய்யப்படாததால் அவருடன் வேறு எவரும் பதவியேற்கப்போவதில்லை. புதிய அமைச்சரவைக் குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் பூபேந்திர படேல்.

இந்த நிலையில், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு பதவியேற்பார் என ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.