சந்திர கிரஹணம் – சாஸ்திரிகளின் விளக்கம்.

16-07-2019 .

செவ்வாய்க்கிழமை

இன்று பூரண சந்திர கிரகணம்._*

செய்ய வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.
************************************************
கிரகண காலம் என்பது நம் சாஸ்திரங்களில் புண்ணிய காலமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. கிரகண காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியம், ஒன்றுக்கு பல மடங்கு பலன்களை தரவல்லது. நம்முடைய நல்ல கர்மாக்களின் மூலமாக புண்ணிய பலன்களை பெருக்கிக்கொள்வதற்கு உகந்த நேரம் கிரகண நேரம்.வரும் 16-ம் தேதி பூர்ண சந்திர கிரகணம் வருவதையொட்டி கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன என்று

திரு.வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் அவர்கள் அளித்த தகவல்கள்._*
************************************************

கிரகண காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை பற்றி நம் வேதகால ரிஷிகள் விளக்கமாக கூறியிருக்கிறார்கள். கிரகணம் தொடங்கும்போது நாம் செய்யவேண்டிய நீராடல்,மந்திர ஜபம், தர்ப்பணம் கொடுத்தல், தானம் செய்தல்,கிரகணம் முடிந்த பிறகு மறுபடியும் நீராடல் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்._*
************************************************
*_தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி,சந்திர கிரகண காலத்தில் நாம் செய்யும் மந்திர ஜபங்கள் நமக்கு அளவற்ற நற்பலன்களை தரும். அப்போது நாம் செய்யும் மந்திர ஜபம் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன்களை தரும்.குறிப்பாக உபநயனம் செய்விக்கப்பட்டு, பிரம்மோபதேசம் செய்விக்க பட்டவர்கள் கண்டிப்பாக கிரகண காலத்தில் மந்திர ஜபம் செய்யவேண்டும். காயத்ரி மந்திரம் ஜபம் செய்வதற்கு உகந்த நேரம். பெண்கள் உள்பட மற்றவர்கள்,தங்கள் குருநாதர் மூலம் ஏதேனும் மந்திரோபதேசம் பெற்றிருந்தால்,அந்த மந்திரத்தை ஜபம் செய்யலாம்._*

*_அப்படி உபதேசம் பெறாதவர்கள், இறைவழிபாடுகளில் ஈடுபடலாம்.தேவாரம், திருவாசகம்,திவ்ய பிரபந்தம் போன்ற தெய்வ பாடல்களை பாராயணம் செய்யலாம். அல்லது, ‘ஓம் நமசிவாய’, ‘ஓம் விஷ்ணவே நம:’, ‘ஓம் நாராயணாய நம’ என்ற நாமாவளிகளை ஜபிக்கலாம்.குலதெய்வ மந்திரங்களையும் ஜபிக்கலாம்._*
************************************************
*_மந்திர ஜபத்துக்கு பிறகு, மறைந்த நம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.தந்தை இருப்பவர்கள் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது.அதற்கு பதில் தானம் கொடுக்கலாம்._*
************************************************
*_கிரகணம் தொடங்குவதற்கு சுமார் ஒன்பது மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் உணவு உண்டுவிட வேண்டும். அதற்கு பிறகு கிரகணம் முடியும்வரை எதுவும் சாப்பிடக்கூடாது._*
************************************************


*_முதியவர்கள், குழந்தைகள்,கருவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த விஷயத்தில் நம்முடைய ரிஷிகள் விலக்கு அளித்திருக்கிறார்கள். மற்றவர்கள் கிரகணம் தொடங்குவதற்கு ஒன்பது மணி நேரத்துக்கு முன்பு சாப்பிடவேண்டும் என்றால், இவர்கள் மூன்று அல்லது இரண்டு மணிநேரத்துக்கு முன்பு உணவு எடுத்துக்கொள்ளலாம்._*
************************************************
*_காரணம் மற்றவர்களுக்கு, கிரகணத்தினால் ஏற்படக்கூடிய தீட்டு என்பது 16-ம் தேதி மாலை 4.02 மணிக்கு தொடங்குகிறது. முதியவர்கள்,குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு,இரவு 10.02 மணிக்கே தீட்டு காலம் தொடங்குகிறது._*
************************************************

*_இந்தியா மட்டுமல்லாமல், லண்டன்,இலங்கை, நேபாளம்,மலேசியா, அபுதாபி,இந்தோனேசியா, ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சந்திர கிரகணம் ஏற்படும் என்பதால்,அங்கே உள்ளவர்களும் மேலே சொன்ன நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அமெரிக்காவில் சந்திர கிரகணம் தெரியாது என்பதால்,அவர்கள் மேலே கூறியவற்றை கடைபிடிக்க தேவையில்லை._*
************************************************
*_சந்திர கிரகணம் முடிந்ததும் மறுபடியும் ஸ்நானம்,ஜப தபங்கள், தர்ப்பணம் ஆகியவை செய்யவேண்டும்.அன்று தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதமும் பிறக்கிறது.எனவே சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன்,ஆடி மாதம் பிறந்த பிறகும் மறுபடியும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்._*
************************************************
*_சந்திர கிரகணம் 16-ம் தேதி இரவு 1.32 மணிக்குப் பௌர்ணமி திதி,உத்திராட நட்சத்திரம்,மகர ராசி,மேஷ லக்னத்தில் தொடங்குகிறது._*
************************************************
*_கிரகண மத்திய காலம் இரவு 3.01 மணி; கிரகண முடிவு காலை 4.30._*
************************************************
*_தர்ப்பணம் கொடுக்கும் நேரம் 16-ம் தேதி 3 மணிக்கு மேல் நீராடிவிட்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.காலை 4.3-க்கு கிரகணம் முடிந்ததும் மறுபடியும் நீராடவேண்டும். கிருத்திகை,உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களிலும்,ரோகிணி, அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் உரிய சாந்தி பரிகாரங்கள் செய்துகொள்ளவேண்டும்._*
************************************************
*_கிரகண தர்ப்பணம் முடிந்து ஸ்நானம் செய்த பிறகு,மாத பிறப்பும் வருவதால்,மாத பிறப்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு முன்பும் நீராடவேண்டும்._*
************************************************
*_17-ம் தேதி காலை 6.00 மணிக்கு சூரிய உதயம். ஆனால்,அன்று முற்பகல் 11.38 மணிக்குத்தான் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதம் தொடங்குகிறது._*

*_எனவே,சூரியோதயம் ஆனவுடன் மறுபடியும் அனுஷ்டான ஸ்நானம் செய்துவிட்டு,உத்தராயணம் இருக்கும்போதே,ஆடி மாத பிறப்புக்கான புண்ணிய கால தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்களா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம்.அவசியம் செய்யவேண்டும் “ என்றார்._*
************************************************
நன்றி:-தகவல்களின் களஞ்சியம்” கட்செவி அஞ்சல் குழு மற்றும் “மலேசியா ஆன்மீக சங்கம்” .

ராஜ கர்ஜனை ( ஆன்மீகம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன