சர்வமும் தரும் சாகாக்கலை – “யோகா”.

ஆதி முன்னோர் காலத்து அரிய கலை “யோகா”.

 

யாரோ ஒரு சிலருக்குத்தான் இது பொருந்தும் என அலட்சியப்படுத்தாமல் தயவு செய்து தொடரவும் அன்பர்களே..

 

மிக மிகப் பழமை வாய்ந்த இந்த கலையின் வயது சுமார் 5000 வருடங்கள் .

இது நமது இந்தியாவில் கண்டறியப்பட்டது என நாம் பெருமைப்பட வேண்டிய கலை.

இதற்கு கட்டியம் கூறுவதற்கு சான்றுகள் இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது..

குறிப்பாக ஹரப்பாவில் உள்ள கற்சிலைகள் சாகாக்கலை யோகாவிற்கு முரசு கொட்டி கட்டியம் கூறுகிறது..

யோகாவின் தந்தை சூத்திரதாரி மகா குரு ராஜசித்தர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஆவார்.

இந்தியாவில் தமிழகத்தில் நம்மை வழி நடத்திய , நடத்திக் கொண்டிருக்கும் சித்த பரம்பரையில் முதன்மையானவர்களில் ஒருவர் “மகான் ஸ்ரீ Uதஞ்சலி ”

வேத காலங்களுக்கெல்லாம் முன்கூட்டியே இந்த கலை அறியப்பட்டதாக தெரிகிறது.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்களுக்கும் நமக்கும் ஓர் இணைப்பை (LINK) ஏற்படுத்தி அதிலுருந்து சக்தியை உறிஞ்சி நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும் சாகாக்கலை தான் “யோகா”.

மதம், இனம், மொழி, ஆண், பெண் மற்றும் குழந்தைகள் எவரும் பாரபட்சமில்லாமல் கற்க வேண்டிய கலை நமது பாரம்பரிய “யோகம்”.

 

யோகம் என்ற தமிழ் வார்த்தையின்  சமஸ்கிருத சொல்லில் இருந்து யோகா என்ற சொல் வந்ததாக கூறப்படுகிறது.

.யோகாவின் முதல் பயிற்சியான தியானம் மூலமாக மூச்சை இழுத்து வெளியே விடுவதன் மூலம் உடலுக்கு போதிய ஆக்சிஜன் கிடைத்து, மூளையும் சுறுசுறுப்படைகிறது.

மேலும் சூரிய நமஸ்காரம் மூலம் நமக்கு உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கிறது என்றால் அது மிகையாது.

அனுதினமும் யோகம் செய்தால் உடல் புத்துணர்வு பெறும்
நமக்கு நாமே சிகிச்சை செய்து கொள்வதைப் போன்றது
மனதில் இருக்கும் .

நம்மில் உள்ள ” எதிர் “மறையான எண்ணங்களை விரட்டும்.

பல வருடங்களாக தேங்கியுள்ள உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றும் ..

எதிர்பாராத தனிப்பட்ட முறையில் உங்களுக்கு புதிய சக்தியைக் கொடுக்கும்

மிகப்பெரிய அளவில் புதிய விழிப்புணர்வுடன் வாழ்வதற்கு உங்களுக்கு வழி வகுக்கும்
கூர்மையான எண்ணங்கள், மனதை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைக் கொடுக்கும்

.முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது .

மன அழுத்தத்தை குறைக்கும். உடல் வளைவு தன்மையைக் கொடுக்கும்
சிறந்த உறவுகளை மேற்கொள்வதற்கு யோகம் உதவும்

மனதையும், உடம்பையும் ஒருங்கிணைக்கும்
ஜீரண சக்தியை அதிகரிக்கும்
அடி வயிற்றுக்கு வலிமை கொடுக்கும்
மூட்டு வலி குணமடையும்

யோகா செய்வதன் மெல்லாம் தனிப்பட்ட நபர் தனது மனதையும், ஆன்மாவையும் ஒருங்கிணைக்க முடியும். மன அழுத்தம் வெளியேறும், மனது லேசாகும்.

நமது உடலுக்கு ஆக்சிஜன் சீராக செல்வதால் உடல் புத்துணர்வு பெற்று சுறு சுறுப்படையும். தசைநார்கள் வலுப்பெறும். சருமம் புத்துணர்வு பெறும்.

தினமும் யோகா செய்வதன் மூலம் எடை குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக இருக்கும். முறையாக பயிற்சி பெற்று யோகா தினமும் செய்து வந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

தற்போது உலகம் முழுவதும் யோகாவை கற்று, தினமும் யோகா பயிற்சி செய்து வருகின்றனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 36 மில்லியன் மக்கள் யோகாவில் ஈடுபட்டு வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நீங்களும் யோகா செய்து நீண்ட ஆரோக்கியம் பெற்று மகான்கள் ஆசியுடன் இந்த பிரபஞ்ச சக்தியை முழுமையாக பெற்றிடுங்கள்.

குறிப்பாக யோகக்கலையைப் பற்றி  பலப்பல புத்தகங்கள் மற்றும் பல வழிகள் இருந்தாலும் வழிவழியாக வளரும் இந்த கலையை தகுந்த ஆசான் (குரு) மூலம் கற்பது சாலச் சிறந்தது..

குருசரணம்..

நன்றி – திருநீலகண்டர் .

SRI BALAMBIGA SATHYA PEETAM

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன