சாகாத்தலை-வேகாக்கால்-போகாப்புனல்

என்ன அது ???சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்

அதைப்பற்றி சிறு விளக்கம் பார்ப்போம் வாருங்கள் மெய்ன்பர்களே

ஆன்மாவுக்குத் முத்தேகசித்தி வாழ்வு வழங்கவே, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், மகா பிரபஞ்ச காரியத்தை ஆதி முதல் நடத்தி வருகின்றார்.
உண்மையில், அக்கடவுளே தன் இயல் உண்மை நிலையை ஒவ்வொரு ஆன்ம அணுவிலும் நிரம்ப வைத்துள்ளார்.

அதனால், ஒரு குறிப்பிட்ட ஆன்மாவுக்கு அக அருள் ஞான அனுபவம் உண்டாக அதற்கு உள்ளிருந்து உயிர்ச் சக்தியை.ஆன்ம அருள் சக்தியை வெளிப்படுத்தி செயல் படுத்தி உள்ளது
அதுவே பக்குவம் உள்ள ஆன்மாவாகும்., அந்த பக்குவம் உள்ள ஆன்மாதான் திருஅருட்பிரகாசவள்ளல் பெருமானாகும்.

உலகம் எல்லாம் விளங்கத் தேகாதி பிரபஞ்ச வடிவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்துள்ளார்.
எல்லா உயிர்களும் விளங்க .உடம்புகளும் விளங்க வளர்த்து வருகின்றார். இதனால் ஒவ்வொரு பிறவியாகிய தேகச் சூழலிலும், புலன் உணர்வு, மன அறிவு, ஆன்ம ஞானம் முறையாக வளர்ந்து வருகிறது. ஆன்மாவில் அகத்தில் நித்திய நிறைவாகியுள்ள அருட்பெருஞ்ஜோதியில் நின்றே ஒவ்வொரு பிறவியிலும், உடல், உயிர், ஞானம் வெளிப்பட்டு வளர்வதும், உட் சுருங்கிக் கிடப்பதும், மேல், அடுத்து வரும் பிறவியிலும் தொடர்கதையாக இருக்கிறது.

வள்ளலார் பாடல் !

திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்

தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே

உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்

மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.!

இறுதியில் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்திற்கு
இவ் உண்மை விளங்க விளக்க வந்ததே, *சாகாத்தலை, வேகாக் கால், போகாப்புனல் என்பதாகும்*

1. சாகாத்தலை :

சாகாத்தலை என்பது ஞானம்.அருள் விளங்கும் இடம்..அதாவது ஆன்மா இருக்கும் இடம். இது பிறவி தோறும் உயிர் உடம்பு எடுத்து தொடர்ந்து பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கின்றது. அதன் விளைவு இறுதியில் மரணம் வந்து கொண்டே இருக்கின்றது.
சாகும் தலையாக உள்ள ஆன்மாவை சாகாத்தலையாக மாற்ற வேண்டும். அதாவது உயிர் உடம்பை அழிக்காமல் தன்வசமாக மாற்றி அருள் ஒளியாக மாற்றுவதே சாகாத்தலை என்றும் அதை பயில்வதற்கு சாகாக்கல்வி என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்…!

ஆன்மாவை மாயா பூத தத்துவங்கள் மறைத்துக் கொண்டுள்ளன.தத்துவங்களை கடந்து தத்துவா தீதமாக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும்.அதுவே சாகாத்தலையாகும் மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்வதே ஆன்ம லாபம் என்பதாகும்.இது ஆன்ம அனுபவ காட்சியில் அனுபவிப்பதாகும்.அனுபவத்தால் மட்டுமே அறியமுடியும்.

2. வேகாக் கால்

வேகாக்கால் என்பது அழியும் ஜீவனை அழியாத ஜீவனாக (உயிர்) மாற்றுவதே பிராணவாயுவாகிய உயிர்க்காற்றாகும்.அமுதக்காற்றாகும்
நாம் சுவாசிக்கும் காற்று நான்கு வகை கலவையாக உள்ளது. விஷக்காற்று உஷணக்காற்று, பூதகாற்று, அமுதக்காற்று என்பவையாகும்.
நம் உயிர். உடம்பு பஞ்ச பூதங்களால். ஆன்மா வாழ்வதற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட.பஞ்ச பூத உடம்பாகும்.

இதற்குள் 96 தத்துவங்கள் அடங்கிய உறுப்புக்களால் பின்னப்பட்டதாகும்.
தத்துவங்களை வெல்லுவதற்கும். தத்துவங்களை கடப்பதற்கும் வேகாத காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இவ்வுலகில் உடம்பை உயிரை. வளர்க்க வாழ்வதற்கு விஷக்காற்று.உஷ்ணக்காற்று.பூதக் காற்று.ஏகதேச அமுதகாற்றை சுவாசித்துக் கொண்டு உள்ளன.

விஷக்காற்றை. உஷ்ணக்காற்றை. பூதக்காற்றை சுவாசிக்காமல் அழியாத காற்றாகிய வேகாத காற்றாகிய அமுதக்காற்றை மட்டும் சுவாசிப்பதே வேகாக்கால் என்பதாகும்.அதற்கு அமுதகாற்று என்று பெயர்.

அமுதக்காற்றே வேகாக்கால் என்பதாகும்
ஆன்மாவானது உடம்பு உயிரை விட்டு பிரியாமல் வாழ்வதற்கு வேகாக்காலான அமுதக்காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

அமுதக்காற்று காலை 4-00 முதல் 6-00 மணிவரை உயிர்களின் நன்மைக்காக பூமியை நோக்கி இயற்கையாக இறைவனால் அனுப்பப்படுகிறது. ( விரிக்கில் பெறும்)

3. போகாப்புனல்

நம் உடம்பில் பஞ்ச பூதங்கள் நிறைந்து இருக்கின்றது.அதில் உஷ்ணம். காற்று .தண்ணீரால் உடம்பு இயங்கிக் கொண்டு உள்ளது.
போகும் தண்ணீர் போகாத தண்ணீர் என இருவகை உண்டு.போகும் புனல் என்பது உணவினால் உண்டாகும்

இரத்தம்.போகாப்புனல் என்பது அருள் அமுதம்.
அமுதக்காற்றினால் ஆன்ம உணர்வால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையினால் உண்டாகுவதுதான் அருள் என்னும் அமுதமாகும்.அமுதத் தாரகையாகும்.

பூத உணவால் உண்டாவது இரத்தம் இது நிலைக்காது வயோதிக காலத்தில் வற்றிவிடும் இறுதியில் மரணம் நிச்சயம்.

போகும்புனல் என்பதாகும் காலம் கடந்தாலும் மரணம் வந்து விடும்
போகாப்புனல் என்பது அருள் அமுதம்
.உடம்பு உயிர் நிறைந்து ஒளி உடம்பாக மாற்றும் தன்மை உடையது .பஞ்ச பூதங்கள் அற்றது எனவே அதற்கு போகாப்புனல் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

மனித வாழ்க்கையில் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்கிகள் மிகவும் முக்கியமாக தெரிந்து கொள்வதே.சாகாத்தலை. வேகாக்கால்.போகாப்புனல் என்பதாகும்.

இது படிப்பால் அறிவது அல்ல.அனுபவத்தால் அறிவதாகும்.

*சாகாத்தலை என்பது உடம்பை உயிரை விட்டு பிரியாமல் இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியாகும்*

*வேகாக்கால் என்பது பூத சூடு பற்றாத கலவை இல்லாத அமுதக்காற்றாகும்*

 

*போகாப்புனல் என்பது உடம்பை உயிரை ஆன்மாவை பிரியாமல் பாதுகாக்கும் அருள் அமுதமாகும்*.

அமுத நன்னீராக அகத்திலே இருந்து சுரப்பதே போகாப்புனலாகும். உயிர் விளங்க உடல் விளங்க பூத உடம்பை அருள் ஒளியாக மாற்றுவதே போகாப்புனலாகும்.
இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து , என்றும் அழியாத சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று மரணத்தை வெல்லும் துவாரமாகும்.

மனிதப் பிறவியில் மட்டும் தான் அனுபவ பக்குவத்தே இம்மூன்றும் வெளிப்படுகிறது.. மற்றபடி எப்பொருளிலும், எவ்வுயிரிலும் இவை மறைமுகமாகவே செயல் படுகின்றது.
இதற்கு அனுபவம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக சுருக்கமாக நிரப்பி வைத்துள்ளார்.

மேலும் சுத்த சன்மார்க்க மரபு என்பதை பாடல் மூலம் தெரியப்படுத்துகின்றார்.!
சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்

ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்

மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ

ஏகாய உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே!.

மேலும்

சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்

விளையவிளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம்எல்லாம்

மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை

வானவர மேஇன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

மரபென் றுரைத்தகுருவே

தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்

தேற்றிஅருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

தெய்வநட ராஜபதியே.!

என்னும் பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்.
இன்னும் விரிக்கில் பெருகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

 

ராஜகர்ஜனை (ஆன்மீகம். சிந்தனை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன