சிந்தனையும் – புரிதலும்..

வணக்கம்.. கர்ஜனையின் முகவரிகளே..ஒவ்வொரு முறையும் நாம் ஆழ்ந்து சிந்திக்கும் பாேது நம்முடைய
நினைவில் உள்ள அத்துணை
விஷயங்களுக்குள்ளும்  தாெடர்பு
காெள்கிறோம் என்பதை சர்வநிச்சயமாக உணருகிறோமா?

. ஆம்.. நீங்கள்  தாெடர்பு
காெள்கின்றீர்கள் …

சிந்தித்தல் இருக்குமிடத்தில்
புரிந்து காெள்ளல்
இருக்காது …

உங்களால் புரிந்து
காெள்ள முடிய வில்லை
என்பதால் தான் சிந்திக்கின்றீர்கள் …

புரிந்து காெண்டதும் உங்கள்
சிந்தித்தல்
மறைந்து விடும் …

தெரியாத ஒன்றை உங்களால்
சிந்தித்துப்
பார்க்க முடியாது …

தெரிந்த ஒன்றை மட்டுமே உங்களால்
சிந்தித்துப்
பார்க்க முடியும் …

அதனால் சிந்தித்தலில் புதிதாக
எதுவும்
வெளிப்படாது ….

புரிந்து காெள்வதில் மட்டுமே புதிதாக
எதுவும்
இருக்கும் ….

சிந்தனையில் கேள்விகள்
மட்டுமே உள்ளன ..
ஆனால் பதில்கள் இல்லை …

புரிந்து காெள்வதில் கேள்விகளுக்கு இடமே இல்லை ..
அங்கு பதில்கள் மட்டுமே உண்டு ….

உங்கள் சிந்தனைகள் அனைத்தும்
பிறரிடம் இருந்து
கடன் வாங்கப் பட்டவை தான் ..

மனம் ஒரு கணிப் பாெறி பாேல்
வேலை செய்கிறது …..

அது விடையளிக்கும் முன் நீங்கள் அதனுள் விடைகளை
திணித்து வைத்திருக்க வேண்டும் ….

நீங்கள் கணிப் பாெறியில் என்ன பதிவு செய்து
வைத்திருக்கின்றீர்களாே அதைத் தான் காெடுக்கும் ..

அது போலத்தான் மனமும்
செயல் படுகிறது ..

ஆனால் புரிந்து காெள்ளல் தூய அறிவாக
வேலை செய்கிறது …

அது உங்கள் மெய்யிருப்பில்
இருந்து தான்
வருகிறது ….

உங்களுள் மறைந்து உள்ள அந்த
புரிந்து காெள்ளும்
ஆற்றலை கண்டு பிடியுங்கள் …

அதற்கு வழி உங்கள் சிந்தனைகளை
விட்டு
விடுவது தான் …

அன்பும் தியானமும் உங்கள்
சிந்தனைகளை
விட்டு விடுவதற்கு துணை நிற்கும் …

டெய்ல் :

சிந்தித்தலும்
புரிந்து காெள்ளலும் ..தன்னைத்தான் உணர்வதில் அடங்கியுள்ளது.

 

நன்றி

ராஜகர்ஜனை (சமூக சிந்தனை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன