மயிலாப்பூர் விஸ்வகர்மா மக்கள் சார்பில் 1.10.2023-ம் தேதி மயிலை P.K.மஹாலில் காலைஸ்ரீ விஸ்வகர்மாஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வகர்மா பூஜையும்-உற்சவமூர்த்திகள் *ஸ்ரீவிஸ்வகர்மா-ஸ்ரீவிஸ்வகர்மா காயத்ரி தேவி* ஊர்வலம் தெற்கு மாடவீதி முழுமை யாக சுற்றி வலம் வந்தது!!
நம் சங்க உறுப்பினரும் மயிலாப்பூர் கிளை சங்கதலைவராக நியமனம் செய்யப்பட இருக்கும் பிரம்மஸ்ரீ S.கருணாகரன் ஆச்சாரி தலைமை ஏற்று பிரம்மஸ்ரீகள் M.முத்துப்பாண்டி, E.ராமசந்திரன், K.செல்வம்,(மந்தைவெளி) K.ஸ்ரீனிவாசன்,P.கோபி,E.பாஸ்கர், J.செல்வம் நிர்வாக குழுவைசேர்ந்தவர்கள் முழு ஒத்துழைப்புடன் விழா பிரம்மிக்கும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்!
விழாவில் விஸ்வகர்மா வம்சவழி சங்கத்தின் தலைவர்-காப்பாளர் பிரம்மஸ்ரீ A.விஸ்வகணேஷ் சிறப்புரையாற்றினார். முன்னதாக பிரம்மஸ்ரீ அசோகன் வரவேற்று பேசினார்.
விழாவில் நம் சங்க மாநில கௌரவ ஆலோசகர் பிரம்மஸ்ரீ P.கௌதமன்,மாநில நகைமேம்பாடு நலத்தலைவர் V.சந்திரசேகர்-மற்றும் பிரம்மஸ்ரீ Jai. Ra. செழியன் (ராஜகர்ஜனை -பத்திரிக்கை)-மயிலை-மந்தை
வெளிப்பகுதி விஸ்வகுலப் பெருமக்களும்-மற்ற பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீவிஸ்வகர்மா அருளைப்பெற்றார்கள். விழாவில் உபயதாரர் அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது!
மயிலை நகைவியாபாரிகள் சென்னை சங்கத்தலைவர் பிரம்மஸ்ரீ V.T.பானுமூர்த்தி ஆச்சாரி,பொருளாளளர் VTB.கோபிநாத் ,ஸ்ரீகாளிம்பாள் அறங்காவலர்களும் -மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தார்கள்!
காப்பாளர்- மாநிலத்தலைவர்.