சென்னை ராயப்பேட்டை அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது. 2 பேர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த காரை ஓட்டி வந்தவரும், உடன் வந்தவரும் காரில் இருந்து கீழே இறங்கினர். இதையடுத்து காரின் முன்பகுதி தீபிடித்து எரிந்தது.

இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக ராயப்பேட்டை மேம்பாலத்தின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீக் என்பதும், பழைய காரை கடந்த சில மாதங்களுக்கு முன்தான் விலைக்கு வாங்கியதும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக ஓடும் காரில் தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.