Warning: Creating default object from empty value in /home/chennaiw/public_html/rajakarjanai.com/wp-content/plugins/slick-popup/libs/admin/redux-framework/inc/class.redux_filesystem.php on line 29
செஸ் – 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் இளம்பரிதி பட்டம் வென்றார் – rajakarjanai

செஸ் – 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் இளம்பரிதி பட்டம் வென்றார்

மாமியா: உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரணவ் ஆனந்த், இளம்பரிதி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். இதில் இளம்பரிதி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ருமேனியாவின் மாமியா நகரில் நடைபெற்றது. இதில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஆனந்த் 11 சுற்றுகளின் முடிவில் 9 புள்ளிகள் சேர்த்து சாம்பியன் பட்டம் வென்றார். பெங்களூரைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த் 7 வெற்றிகளையும், 4 டிராக்களையும் பதிவு செய்தார். முன்னதாக கடந்த வியாழக்கிழமை இந்தத் தொடரில் அவர் 2,500 இஎல்ஓ புள்ளிகள் எட்டியதைத் தொடர்ந்து இந்தியாவின் 76-வது கிராண்ட் மாஸ்டராகியிருந்தார்.

இதே தொடரில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் இளம்பரிதி பட்டம் வென்றார். 11 சுற்றுகளின் முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பரிதி 9.5 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். 9 வெற்றிகள், ஒருதோல்வி, ஒரு டிராவை பதிவு செய்திருந்தார் இளம்பரிதி. 13 வயதான இளம்பருதி, சென்னை தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார்.