டிப்ஸ் -கேஸ் சிலிண்டர் விழிப்புணர்வு ..

*விழிப்புணர்வு பதிவு*

*வீட்டில் கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!*

 

*பொதுவாக நகரங்களில் அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கிறது. அனைவருக்கும் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருக்கும்.* ஆனாலும்் கூட மறுபடியும் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கவனமாக படியுங்கள்..

 

*சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும் போது, சமையல் கேஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.*

1.வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும்.

2.சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்மந்தமான அடுப்புகளை வைத்து பயன்படுத்தக் கூடாது.

3.சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியுப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.*

4.சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க் குமிழ் உருவாகும். இதைக் கொண்டு எரிவாயு கசிவை பரிசோதிக்க வேண்டும்.

5. எக்காரணம் கொண்டும் எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.*

6.நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

7.கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.*

ராஜகர்ஜனை ( சமூக விழிப்புணர்வு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன