தங்க தமிழ் செல்வன் Vs தினகரன்

தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியான விவகாரம் விஸ்வரூபமெடுக்கிறது.

*என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்.

தங்கதமிழ்ச்செல்வன் பகிரங்க அறிக்கை

மேலும் அவர் கூறுகையில் கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான்; என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என வினவியுள்ளார் தடாலடி தங்கதமிழ்ச்செல்வன்

.

முன்னதாக டிடிவி தினகரனைப் பற்றியும் ,கட்சியை பற்றியும் தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன் இதுவரை எந்த விதமான மறுப்பும் தெரிவிக்க வில்லை என தெரிகிறது.

செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத், கலையரசனை தொடர்ந்து இவரும் சர்ச்சையாகி இருக்கிறார். ஒரு வேளை இவரும் அவர்கள் வழி செல்வார் என எதிர் பார்க்கலாம்.

போகிறவர்கள் போகட்டும் என்று இவர் சொல்லும் அளவிற்கு தினகரன் ஒன்றும் “ஜெயலலிதா “இல்லை எனவும் பரவலாக கட்சியில் பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் அவர்கள் அளித்த பேட்டியில்

*யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க அச்சமோ, தயக்கமோ எனக்கு இல்லை என தெரிவித்திடுக்கிறார்

மேலும் அவர் பேசும் போது தங்க.தமிழ்ச்செல்வன் ஒன்றும் விஸ்வரூபம் எடுக்க முடியாது. பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார் எனவும் கிண்டலடித் திருக்கிறார்.

*எனக்கு அறிவுரை சொல்ல தங்க.தமிழ்ச்செல்வன் யார்?.*

*நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனால், அவர் பொறுப்பிற்கு மற்றொருவர் நியமிக்கப்படுவார, எனவும்

அவரை
யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
.

டெய்ல் பீஸ்:

1.சபாநாயகருக்கு எதிரான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பேன் – தினகரன்.

2. தங்கதமிழ்செல்வன்‌ அமமுகவிலிருந்து விரைவில் நீக்கப்படுவார் – தினகரன் அதிரடி

ராஜகர்ஜனை (அரசியல்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன